தனித்தனியாக பிரியும் போர்ட்டபிள் வேகத்தடை - நடவடிக்கை எடுக்கப்படுமா?

தனித்தனியாக பிரியும் போர்ட்டபிள் வேகத்தடை - நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகளின் வேகத்தை குறைப்பதற்காக மாநகராட்சி சார்பில் போர்ட்டபிள் வேகத்தடைகள் பொருத்தப்பட்டன. போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் பகுதி, விபத்து பகுதி என பல்வேறு இடங்களில் விபத்து மற்றும் நெரிசலை தடுக்க, முக்கிய சாலை சந்திப்புகளில், வாகன வேகத்தை ஒழுங்குபடுத்த புதிய இடங்களில் இந்த போர்ட்டபிள் ஸ்பீட் பிரேக்கர்கள் அமைக்கப்பட்டது.

தற்போது மத்திய பேருந்து நிலையம், கண்டோன்மெண்ட் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த வேகத்தடை போன்று சில மாதங்களுக்கு முன்பு திருவானைக்கோவில் முதல் அண்ணா சிலை வரை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வேகத்தடைகள் அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே வேகத்தடைகள் தனித்தனியாக பிரிந்து வந்துவிட்டது.

தற்போது இந்த வழித்தடத்தில் ஆங்காங்கே சாலையில் இந்த வேகத்தடைகள் வேகத்தடைகள் போல் இல்லாமல் துண்டு துண்டாக உள்ளது. வேகத்தை குறைக்கவும், விபத்தை தடுக்கவும் போடப்பட்ட வேகத்தடைகளால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதால் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision