இந்த குழந்தைகளை பற்றிய விவரங்கள் தெரிந்தால் தகவல் தெரிவிக்கலாம்
படத்தில் காணும் பெண் குழந்தை திருச்சி உறையூர் வாணிய செட்டி தெரு அருகில், ஒன்பது மாத பெண் குழந்தையை வைத்துக் கொண்டு சுடிதார் போட்டு வந்த
பெண் ஒருவர், பெண் குழந்தையை போட்டு விட்டு சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின்
அடிப்படையில் (06.01.2022 ) அன்று மீட்கப்பட்ட ஒன்பது மாத பெண் குழந்தையை, சைல்டு லைன்-1098 மீட்டு அருகில் உள்ள நகர அரசு சுகாதார நிலையத்தில் மருத்துவ உதவி வழங்கிய பிறகு, திருச்சிராப்பள்ளி குழந்தைகள் நலக் குழுமத்தில் முன்னிலைப்படுத்தினர்.
பெண் குழந்தைக்கு அரசி என்று பெயரிடப்பட்டு, திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் தற்காலிக பராமரிப்பு ஆணை (Temporary Custody Order) வாயிலாக திருச்சிராப்பள்ளி, சாக்சீடு - புனித மார்டின் சிறப்பு தத்துவள மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இக்குழந்தையை பற்றிய விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் இவ்வறிப்பு வெளியான 21 நாட்களுக்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், குழந்தையை உரிமை கோரி எவரும் தொடர்பு கொள்ளாத நிலையில், குழந்தையை சட்டப்படி தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்படும்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி பகுதியில் அமைந்துள்ள முசிறி அரசு பொது மருத்துவமனையில் மீட்கப்பட்ட பெண் குழந்தை, சைல்டு லைன்-1098 மூலமாக, மகாத்மா காந்தி நிணைவு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டு, மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலமாக (12.01.2022) அன்று திருச்சிராப்பள்ளி குழந்தைகள் நலக் குழுமத்தில் முன்னிலைப்படுத்தினர்.
அப்பெண் குழந்தைக்கு தீபா என்று பெயரிடப்பட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் தற்காலிக பராமரிப்பு ஆணை (Temporary Custody Order) வாயிலாக அரியலூர், அடைக்கலமாதா தத்துவள மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இக்குழந்தையை பற்றிய விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் இவ்வறிப்பு வெளியான 21 நாட்களுக்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தகவல்
தெரிவிக்கலாம்.
மேலும், குழந்தையை உரிமை கோரி எவரும் தொடர்பு கொள்ளாத நிலையில், குழந்தையை சட்டப்படி தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn