இந்திய மக்கள் கல்வி இயக்க தலைவரை சேஸிங் செய்து பிடித்த திருச்சி EOW

இந்திய மக்கள் கல்வி இயக்க தலைவரை சேஸிங் செய்து பிடித்த திருச்சி EOW

நிதி நிதி நிறுவனம் நடத்தி ரூ.520 கோடி மோசடி தொடர்பாக இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கைது செய்யப்பட்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

திருச்சி காஜா நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்திய பிறகு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு துறையினர் இவரை சென்னை அழைத்து சென்றனர்.

முன்னதாக இவரை திருச்சி பொருளாதாரம் குற்ற பிரிவு துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேசி தலைமையில் காரில் சேஸ் செய்து புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மடக்கி பிடித்தனர். காரை வேகமாக வந்து மடக்கி பிடித்த பொழுது தேவநாதன் மற்றும் அவருடைய நிறுவன செய்தி பிரிவு ஊழியர்கள் வந்த கார் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision