திருச்சி மாவட்ட  இயற்கை முறை விவசாயிகள் சான்று பெற்றிருத்தல் அவசியம் -  ஆட்சியர் அறிவுறுத்தல்

திருச்சி மாவட்ட  இயற்கை முறை விவசாயிகள் சான்று பெற்றிருத்தல் அவசியம் -  ஆட்சியர் அறிவுறுத்தல்

இயற்கை விவசாயம் அல்லது அங்கக வேளாண்மை என்பது முற்றிலும் அங்ககப் பொருட்களான இயற்கை எரு,பசுந்தாள் உரங்கள் மற்றும் பஞ்சகாவ்யா போன்ற இயற்கைப் பொருள்கள் கொண்டு செய்யப்படும் விவசாய முறையாகும். 
இம்முறையில் இராசயனப் பொருட்களான உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சி நோய் மருந்துகள் மற்றும் இராசயன இடுப்பொருட்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

மண் வளத்தினை காத்திடவும், நீர்வாழ் உயிரினங்களின் பல்லுயிர் பெருக்கத்தினை காத்திடவும் அங்கக வேளாண்மைக்கு மாறிடவேண்டும். 

தற்சமயம் நாம் பயன்படுத்தி வரும் உரம். களைக்கொல்லி, பூச்சி, நோய் தடுப்பு மருந்துகளால் மணி தன் வளத்தினை இழப்பது அல்லாமல் தன் உயிர்ப்பு தன்மையும் இழந்து விடுகிறது. 

அதிகஅளவு கரிம பொருட்கள் இருந்தால் தான் மண் வளமாகவும் உயிர்ப்பிடனும் இருக்கும். மேலும், மண்ணில் இருந்து இராசயங்களை அடித்து செல்லும் நீர் அருகில் உள்ள நீர் நிலைகளில் கலப்பதால் ஏரி, குளம் மற்றும் குட்டைகளில் உள்ள நீர் மாகப்படுகிறது.

 இவ்வாறு மாசடைந்த நீரில் ஆகாய தாமரை போன்ற களைகள் அதிகமாகி நீர் வாழ் உயிரினங்கள் பெருக்கத்திற்கு ஆபாத்தாக முடிகின்றது. இதனை கருத்தில் கொண்டு இந்திய அரசும் தமிழ்நாடு அரகம் இணைந்து அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

இன்றைய கால கட்டத்தில் நச்சுதன்மையில்லாத விளை பொருட்களுக்கு அதிக ஏற்றுமதி வாய்ப்பு மற்றும் உள்நாட்டு சந்தையில் நல்ல விளை கிடைக்கிறது. எனவே, விவசாயிகளுக்கு நச்சுதன்மையில்லாத விளைபொருட்களை உற்பத்தி செய்ய இயற்கை வழி வேளாண்மையில் தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுதுறை பெரும்பங்கு ஆற்றி வருகிறது.

உணவு தானியம், சிறுதானியம், பயறு, எண்ணெய் வித்துகள், கரும்பு. காய்கறி, மூலிகை பயிர்கள் மற்றும் பழங்கள் சாகுபடியில் நச்சுதன்மையில்லாத விளைபொருள்கள் உற்பத்தி செய்வதில் 
தமிழகத்தில் அங்ககச்சான்றளிப்புதுறை மத்தியஅரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல்திட்டத்தின்படி செயல்பட்டு வருகிறது.


 அங்ககச்சான்றளிப்பின் அவசியம் :-  இயற்கை விளைபொருட்களின்    தேவை நுகாவோர் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேஇருக்கின்றது.
 நகர்புறங்களில் இயற்கை அங்காடிகள் என்ற பெயரில் பல கடைகள் இயற்கை விளைபொருட்களைவிற்பனை செய்கின்றன, எனவே, இத்தகைய சூழ்நிலையில் இயற்கை வழி வேளாண்மை சான்றளிப்பு உணவு
பொருட்களின் தரத்திற்கு உத்திரவாதம் அளிப்பதோடு நுகர்வோர் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துகின்றது.

நில வளத்தை மேம்பாடுத்தி விவசாயிகள் தங்கள் விளைவித்த பொருட்களுக்கு உள்ளூர் சந்தையில் கூடுதல் இலாபம் பெற வேண்டும் என எண்ணுபவர்களும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய நினைப்பவர்களும், அங்கக விளைபொருட்கள் உற்பத்தி செய்பவர். அங்கக விளைபொருட்கள் பதனிடுவோர் மற்றும் அங்ககபொருட்கள் விற்பனை செய்பவர்கள் தமிழ்நாடு அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுதுறை மற்றும் மத்திய அரசின் அப்பிடா(APEDA) நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் தனிநபராகவோ, குழுவாகவோ பறிவு செய்து கொண்டு இவ்வியற்கை வேளாண்மை சான்றினைப் பெறலாம். 

விண்ணப்பிக்கும் முறை:


அங்ககச் சான்றளிப்பிற்கு விண்ணப்பிக்க விண்ணப்ப படிவம் 1 நகல்கள். பண்ணையின் பொது விபர குறிப்பு 3 நகல்கள், பண்ணையின் வரைபடம், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை விவரம், ஆண்டு பயிர் திட்டம், துறையுடணான ஒப்பந்தம் 3 நகல்கள், நில ஆவணம், வருமானவரி நிரந்தர கணக்கு எண் அட்டைநகல், ஆதார் அட்டை நகல், பார்போர்ட் அளவு புகைப்படம் 2 எண்ணம் ஆகிய விபரங்களுடன் 3 நகல்களின் உரிய விண்ணப்பத்துடன் உரிய விண்ணப்ப கட்டனம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். 

பதிவு கட்டணம். ஆய்வு சான்று கட்டணம். பயண நேர கட்டணம் வருடத்திற்கு சிறு, குறு விவசாயிகள் மொத்தம் ரூ.2700ம், பிற விவசாயிகள் ரூ.3200ம், குழு ஒன்றுக்கு பதிவு செய்திட ரூ.7200ம் வணிக நிறுவனங்களுக்கு ரூ,9400ம் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

 விவசாயிகள் மேலும் தங்களுக்கு தேவைப்படும் விவரங்களுக்கு திருச்சி, மன்னார்புரத்தில் உள்ள விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2420133 என்றஎ ண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn