திமுக கொடி கட்டிய காரில் ஆடு திருட்டு - மூவர் கைது - சொகுசு கார் பறிமுதல்

திமுக கொடி கட்டிய காரில் ஆடு திருட்டு - மூவர் கைது - சொகுசு கார் பறிமுதல்

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் கீதாபுரத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் மற்றும் கணேசன். இவர்கள் ஆடுகள் வளர்த்து, தங்களது வாழ்வாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 13ம் தேதி இவர்களது ஆடுகள் தெருவில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, திமுக கொடி கட்டிய 50 லட்ச ரூபாய் மதிக்கத்தக்க பார்ச்சூனர் கார் ஒன்று வந்தது.

அதில் இருந்த மூன்று பேர், கூட்டமாக சென்ற ஆடுகள் பக்கத்தில் ஓரமாக காரை நிறுத்தி, கார் கதவை திறந்து, 3 ஆடுகளை திருடிச் சென்றனர். சொகுசு காரில் வந்து ஆடுகள் திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, மணிகண்டனும், கணேசனும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். திமுக கொடி கட்டிய ஃபார்ச்சூனர் காரில் வந்தவர்கள் மூன்று பேர் யார்? என்பது குறித்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஸ்ரீரங்கம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அப்போது, ஆடுகளை திருடிய கார், பெரம்பலூர் பக்கம் சென்றது தெரியவந்தது. அதையடுத்து, பெரம்பலூர் முகாமிட்ட போலீசார், வேப்பந்தட்டை தாலுக்கா, வாலிகண்டபுரம் முஸ்லிம் தெரு, மைதீன் (36) என்பவரை பிடித்து அவரிடமிருந்து சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில்,ரியல் எஸ்டேட், கார் புரோக்கர் வேலை செய்து வருவதாகவும், 'திருச்சி கலைஞர அறிவாலயம் எதிரே உள்ள கார் விற்பனை செய்யும் மையத்திற்கு சென்ற மொய்தீன், விற்பனைக்கு வந்த பார்ச்சூனர் கார் ஒன்றை, 5 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து விட்டு, காரை எடுத்துள்ளார்.

இதனையடுத்து மைதீனுடன் வந்த நிஷாந்த் (20), அலி ராஜா (36) ஆகிய மூன்று பேரும் பெரம்பலூர் செல்லும் வழியில் ஸ்ரீரங்கத்தில் ஆடுகளை திருடிவிட்டு சென்றது தெரியவந்தது. மேலும், ஆடு திருடிய பயன்படுத்திய பார்ச்சூனர் காரையும் பறிமுதல் செய்து, ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட மூன்று நபர்களும் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்காக உள்ளார்கள். மைதீன் என்பவர் இதே போல் நிறைய இடங்களில் ஆடு திருடி விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது, இவர் ஆடு திருடி விற்பனை செய்வது தொழிலாக கொண்டுள்ளார் என தெரியவருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision