நூறு ஆண்டுகள் கண்ட ரயில்வே பணியாளர்

நூறு ஆண்டுகள் கண்ட ரயில்வே பணியாளர்

இந்திய ரயில்வே சுமார் 12 லட்சம் பணியாளர்களைக் கொண்ட மிகப்பெரிய அரசு நிறுவனங்களில் ஒன்றாகும்.   
தெற்கு ரயில்வேயில் பழமையான மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க திருச்சிராப்பள்ளி கோட்டமும் ஒன்றாகும். காலனிய காலத்திலிருந்தே ரயில்வேயில் பணியாற்றி இப்போது நூறுவயதைக்கொண்டாடும் சிறப்பை உடையவர்தான் ஸ்ரீரங்கத்தில் வசித்துவரும் திரு. சி.என். கோதண்டராமன்.

இவர், 1923 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி பிறந்தார் பிரிட்டிஷ் இந்தியாவில் 1946 ஆம் ஆண்டு 23 வயதில் எழுத்தராக தென்னிந்திய ரயில்வேயில் உள்ள (இப்போது தெற்கு ரயில்வே),  திருச்சிராப்பள்ளியில் பணியில் சேர்ந்தார்.

  கோட்ட அலுவலகத்தில் கணக்குத்துறையில் பதவி உயர்வும் பெற்று 30.04.1981 ஓய்வும் பெற்றார்.இந்த மனிதர், அவருடைய புத்திசாலித்தனம், செயல்திறன், சிறந்த நினைவாற்றல் மற்றும் அற்புதமான கணக்கிடும் திறன் ஆகியவற்றிற்காக பாராட்டப்பட்டவர். மேலும் அவர் தமது 35 ஆண்டு கால பணி வாழ்வில் ரயில்வேயில் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அவருக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 27 ஆகும்.


ஸ்ரீ சி.என். கோதண்டராமன் ஆதரவற்றோருக்கு உதவுவதற்காக இதுவரை 42 திருமணங்களை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார். 100 வயதில், அவர் சுறுசுறுப்பாக இருக்கிறார், மக்களைச் சந்திக்கவும் சேவை செய்யவும் அவரது கண்களில் உற்சாகத்தை நாம் உணர முடியும். புனித நகரமான ஸ்ரீரங்கத்தில் உள்ள மக்கள் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

திரு. சி.என். கோதண்டராமன் தமது 100வது பிறந்த நாளை 01.05.2023 அன்று கொண்டாடினார். அதில் தென்னக ரயில்வேயும் இணைந்து, அவ்விழாவில் முதுநிலை கோட்ட நிதி மேலாளர்  திரு.என். சுந்தர் ராஜன், ஐ.ஆர்.ஏ.எஸ் மற்றும் பிற அதிகாரிகளும், பணியாளர்களும் திரு. சி.என். கோதண்டராமன் அவர்களை சந்தித்து மரியாதை செய்து பாராட்டினார்கள். இவரைப் போன்ற பணியாளர்கள் ரயில்வேக்கு மட்டுமல்ல நாட்டுக்கே பெரும்சொத்து. அவர்கள் வாழ்வும், வழிகாட்டுதலும் விலைமதிப்பற்றவை.