காந்தியை போன்றவர் மோடி - திமுக எம்.பி பேட்டி

காந்தியை போன்றவர் மோடி - திமுக எம்.பி பேட்டி

பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில தலைமை அலுவலக திறப்பு விழா திருச்சி புத்தூர் கஸ்தூரிபுரத்தில் இன்று நடைபெற்றது. அலுவலகத்தை இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் எம்.பி.இன்று திறந்து வைத்தார். பின்னர் சந்தித்துப் பேசுகையில்.... தமிழகம் முதல் உத்திரபிரதேசம் வரை எந்தந்த ஜாதி கட்சியுடன் சேர்ந்து வெற்றி பெறலாம் என்று தான் கட்சிகள் செயல்படுகிறது.

விரைவில் திருச்சியில் மாநாட்டை நடத்தி எங்களது கட்சியின் வலிமையை காட்டுவோம். பெரம்பலூரில் 3 வருட காலத்தில் செய்துள்ள நலத்திட்டங்களை குறித்து புத்தகமாக வெளியிட உள்ளேன். அரியலூரில் இருந்து பெரம்பலூருக்கு ரயில் பாதை அமைப்பதற்கு தொடர்ந்து மத்திய அரசிடன் கோரிக்கை வைத்துள்ளேன் என கூறினார். மோடி என் பங்காளி அல்ல. அண்டை வீட்டுக்காரர் அல்ல, நாடு வளர வேண்டும் என நாட்டு மீது பற்று கொண்டவர். உழைக்கும் எண்ணம் கொண்டவர். மகாத்மா காந்தியை போன்று இந்திய பிரதமர் மோடி நாட்டின் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் உழைக்கிறார்.

அவருக்கு எதிராக தமிழகத்தில் தவறான தோற்றம் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் விரைவில் மோடி குறித்து புரிந்து கொள்வார்கள். அவரை ஏற்றுக் கொள்வார்கள். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் தவறில்லை. நமது விருப்பத்திற்காக கல்வி வைக்க கூடாது. போட்டி தேர்வை எதிர்கொள்ள அடிப்படை கல்வி தகுதி வளர்த்து கொள்ள வேண்டும்.  

எந்த கொள்கையாக இருந்தாலும், மாணவர்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் பயன்படுத்த வேண்டும். நீட் தேர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏழை, கிராம மாணவர்கள் என கூற கூடாது என தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO