திருச்சி மாவட்டத்திற்கு ஒரு நாள் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்திற்கு ஒரு நாள் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் “அருள்மிகு 
அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற 29.04.2022 வெள்ளிக்கிழமையன்று உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்த்திருவிழாவினை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். எனினும் பள்ளி மற்றும் 
கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.

மேற்கண்ட விடுமுறை நாளில் மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற 
07.05.2022 சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO