போலி சான்றிதழ் தயாரித்து நிலத்தை பதிவு செய்த ஒரு பெண் மற்றும் இரண்டு வழக்கறிஞர் உட்பட நான்கு பேர் கைது

போலி சான்றிதழ் தயாரித்து நிலத்தை பதிவு செய்த ஒரு பெண் மற்றும் இரண்டு வழக்கறிஞர் உட்பட நான்கு பேர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு உதவி ஆய்வாளர் ஜஸ்டின் திரவியராஜ் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்த புகார் மனுவில் மண்ணச்சநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அலுவலர் கோகிலா என்பவர் கடந்த 2ஆம் தேதி நவல்பட்டு காவல் நிலையத்தில் பெறப்பட்ட கடித நகல் எண் 409 - 1/2024 தொடர்பான பதிவான ஆவணங்கள் காணாமல் போனது குறித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் மனு ரசீது 58/19 வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து உண்மை தன்மை சான்று கேட்டு கோகிலா அனுப்பிய கடிதத்தில் விசாரித்த பொழுது நவல்பட்டு காவல் நிலையத்தில் அதுபோன்று ஒரு மனு ரசீது வழங்கப்படவில்லை என்றும், அப்படி வழங்கியதாக போலியான முறையில் ஆவணங்கள் தயார் செய்து பத்திரம் செய்ததாகவும் மேலும் நவல்பட்டு காவல் நிலைய முத்திரை மற்றும் உதவி ஆய்வாளர் முத்திரை ஆகியவற்றை தவறான முறையில் பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் கொடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் நவல்பட்டு காவல்நிலைய ஆய்வாளர் நிக்சன் வழக்கு பதிவு செய்து திருச்சி மாவட்டம் நொச்சியம் அருகே உள்ள நெற்குப்பை சேர்ந்த ஜெகநாதன் (76), பூலாங்குடி காலணியை சேர்ந்த முருகானந்தம் மனைவி சாந்தி (43), திருச்சி பீமநகர் நியூ ராஜா காலனியை சேர்ந்த வழக்கறிஞர் காமராஜ் (42), பீமநகர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் (48) ஆகியோர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது.

அப்பொழுது வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக சில வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாருக்கு எதிராக கண்டன கோசனங்களை எழுப்பினார்கள் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின் திருச்சி அருகே உள்ள நெற்குப்பையைச் சேர்ந்த ஜெகநாதன் (76) என்பவரை மட்டும் வயது மூப்பு காரணமாக ஜாமினில் விடிவித்து மற்ற மூவரையும் சிறையில் அடைத்தனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயன்றதாக சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் தொடர்புடையவர்கள் பற்றி போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் நவல்பட்டு காவல் நிலைய ஆவணத்தை போலியாக தயார் செய்து பத்திரம் பதிவு செய்ததாக இரண்டு வழக்கறிஞர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision