எஸ்.பியின் நள்ளிரவு ரெய்டு -1200 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல்

எஸ்.பியின் நள்ளிரவு ரெய்டு -1200 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல்

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் 9487464651 தொலைபேசி எண்ணுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் துறையூர் பச்சைமலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்  ரவிச்சந்திரன்  உத்தரவிட்டதன் பேரில் 1. கார்த்தி, 2. விக்னேஷ் ஆகிய 2 காவலர்கள் இது தொடர்பாக தகவல் சேகரிக்கவும், துப்பு துலக்கவும் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

இதில் சேகரித்த தகவலின் அடிப்படையில் சிலையூர் வன்னாடு கிராமத்தில் கார்த்தி (எ) இளையராஜா என்பவர் காட்டுப் பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிக்க வைத்திருந்த 8 பேரல் சாராய ஊறல் ( 8×150 =1200 லிட்டர் ) மற்றும் அருகாமை கிராமங்களான கிணத்தூர், நொச்சிக்குளம், புதூர், தண்ணீர் பள்ளம், சின்ன வல்லம், ராமநாதபுரம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 8 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக துறையூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பச்சை மலை பகுதியில் நேரடியாக ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல மண்ணச்சநல்லூர் அய்யம்பாளையம் சன்னாசி கொட்டாய் பகுதியில் காட்டுப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு திருப்பதி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆறு லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு தப்பி ஓடிய திருப்பதி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் குட்கா மற்றும் கூலிப் விற்பனை தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை (06.10.23) முதல் திங்கள்கிழமை (09.10.23) வரை மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தி ரகசிய தகவல்கள் அடிப்படையிலும், திருச்சி மாவட்டம் முழுவதும் இதுவரை 63 குட்கா வழக்குகள் போடப்பட்டு 70 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி , கல்லூரிகளின் அருகில் விற்பனை செய்த 12 நபர்கள் மீது JJ act - சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision