கதறவிடும் கச்சா எண்ணெய் விலை உயர்வு !!
சர்வதேச அளவில் நிகழும் யுத்தங்கள், கச்சா எண்ணை சந்தையை பதம் பார்க்கத் தவறுவது இல்லை. இந்த வகையில் கடந்த ஆண்டில் தொடங்கி, இப்போது வரை நிகழ்ந்து கொண்டிருக்கும் ரஷ்யா, உக்ரைன் யுத்தத்தால், உலகம் பல நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் இடையே போர் மூண்டுள்ளது. இந்தப் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கி, புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் கச்சா எண்ணை விலை உயர்வு.
முன்னதாக, ரஷ்யா, சவுதி நாடு களின் உற்பத்திக் குறைப்பு அறிவிப் பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. செப்டம்பர் 8ம் தேதி வெஸ்ட் டெக்சாஸ் கச்சா எண்ணை ஒரு பேரல் 87.51 டாலர் களாக இருந்தது. இதன் பின்னர் விலை கிடுகிடுவென உயர்ந்து செப் டம்பர் 27ம் தேதி 94 டாலர்களானது.
இதன் பின்னர் விலை சரிந்து அக்டோபர் 5ம் தேதி 82 டாலர்களானது. இப்போது இஸ்ரேல் ஹமாஸ் மோதல் காரணமாக விலை மீண்டும் உயர்ந்து 86 டாலர்களாகியுள்ளது. இதேபோல் பிரென்ட் ரக கச்சா எண்ணை செப்டம்பர் 8ம் தேதி 91 டாலர்களாக இருந்தது. படிப்படியாக விலை உயர்ந்து செப்டம்பர் 27ம் தேதி 95 டாலர்களாக இருந்தது.
பின்னர் அக்டோபர் 5ம் தேதி 8 4 டாலர்களாக விலை வீழ்ந்த நிலை யில், இப்போது விலை 88 டாலர் களாகியுள்ளது. மோதல் தொடரும் நிலையில், கச்சா எண்ணை விலை மேலும் அதிகரிக்கும் என்று எண்ணை சந்தை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியாவில் மீண்டும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision