முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு தான் சேர்த்து வைத்த உண்டியலை அமைச்சரிடம் வழங்கிய மூன்றாம் வகுப்பு மாணவன்!!

முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு தான் சேர்த்து வைத்த உண்டியலை அமைச்சரிடம் வழங்கிய மூன்றாம் வகுப்பு மாணவன்!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அரசு, கொரோனா தடுப்புப் பணிகளை முழுவீச்சில் முடுக்கிவிட்டிருக்கிறது.

Advertisement

இந்தப் பின்னணியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொருளாதார ரீதியில் அரசுக்கு உதவும் வகையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கக் கோரி முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மேற்கொள்ளக்கூடிய செலவினங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் பொதுவெளியில் வெளிப்படையாக வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

Advertisement

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரபலங்கள், பெருநிறுவனங்கள் தொடங்கி எளிய மனிதர்கள், குழந்தைகள்வரை ஏராளமானோர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குப் பங்களித்துவருகின்றனர். அந்த வகையில் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் ரஃபிக் - மதினா. இவர்களுடைய மகன் சமீர் காஜாமலையில் உள்ள சமத் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோர்கள் தினமும் தரும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என சிறிய பணத்தை சிறு வயது முதலே உண்டியலில் சேர்த்து வைத்து வந்துள்ளார்.

இடையில் புயல் நிவாரண பணிகளுக்கும் தான் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை கொடுத்து உள்ளார் அதனை தொடர்ந்து தற்போது முதல்வரின் நிவாரண நிதி விளம்பரங்களை டிவியில் பார்த்து விட்டு தானும் அதற்கு நிதி வழங்குவதாக தந்தையிடம் கூறியுள்ளார்.

தந்தை ரஃபிக் தன்னுடைய மகனை அழைத்துக்கொண்டு தன் மகன் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தையும் எடுத்துக்கொண்டு திருச்சி தில்லைநகரில் உள்ள நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் அலுவலகத்தில் சென்று அமைச்சர் கே.என் நேருவை சந்தித்து உண்டியலை அப்படியே வழங்கினார். அந்த உண்டியலில் சுமார் 2500 ரூபாய் இருக்கும் என அவருடைய தந்தை தெரிவித்தார்.

சிறுவயதிலேயே இதுபோல் உற்சாகமாய் முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கிய சிறுவனை கே‌.என் நேரு பாராட்டி சாக்லெட்டுகள் வழங்கினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK