இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் சென்னை பெண்

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் சென்னை பெண்

கொரானா தொற்று 2வது அலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதிக மக்கள் பாதிப்படைவது படுக்கை வசதிகள் இல்லாமல் இருப்பதே ஆக்சிஜன் படுக்கை பற்றாக்குறை ஏற்படுவதே. எனினும் இது பற்றிய விவரங்களை அரசு அவர்களுடைய இணையதள பக்கங்களில் வெளியிடும் போது சரியான இடங்களில் கிடைக்கிறதா என்பதை ஆய்வு செய்து மக்களுக்கு இணையதளம் மூலம் தன்னார்வலராக உதவிக் கொண்டிருக்கும் பிரித்தி கூறுகையில்,

ஜனவரி மாதம் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டது. நான் என் தந்தை, தாய், தங்கை மற்றும் என் தாத்தா, பாட்டி அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். அந்நேரத்தில் கொரோனா பற்றிய தெளிவான அறிவு நம்மிடம் இல்லை அது பற்றிய விழிப்புணர்வும் இல்லாமல் இருந்தது. தொற்றால் பாதிப்படைந்து நாம் குணமான பின்பும் அதில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால் அது நம் உள் உறுப்புகளை பாதிக்கிறது என்பதே பலரும் அறிந்திராமல் இருக்கின்றன. இந்தத் தொற்று ஏற்பட்டு மருத்துவமனை வீடு என்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இப்படியே எங்கள் வாழ்க்கை ஓடின அந்நேரத்தில் மிகப் பெரும் துயரமாக என் தாத்தா, பாட்டியை இழக்கவும் நேரிட்டது.

இந்த மனநிலையில் இருந்து மீள்வதற்கே மிகவும் கடினமாக இருந்த சூழலில் ஒரு நாள் என் தங்கை தொற்று காலத்தில் மருத்துவர்கள் அளித்த ஆலோசனைகளை பயன்படுத்தி இதற்கான ஒரு விழிப்புணர்வாக எங்கெங்கு மருத்துவர்கள் கொரானா பற்றிய தெளிவான தகவல்கள் கிடைக்கும் என்பதை இணைய தளத்தில் பதிவிட ஆரம்பித்தாள். மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அப்போது தான் நான் சிந்தித்தேன். நமக்கு தெரிந்த தகவல்களையும்  நம்மிடம் இருக்கும் நட்பு வட்டாரங்களை பயன்படுத்தி சரியான தகவல்கள் நம்மை போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கலாம் என்ற இம்முயற்சியை செய்தோம்.

இன்றைக்கு கொரானா தொற்றால் தமிழகம் பெரும் பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிக மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் படுக்கை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். அரசும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் வலைதளங்களை உருவாக்கி மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை வசதிகள் விவரங்களையும் அளித்த வண்ணம் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் 8 மணிக்கு செய்தியை பதிவிட்டால் 10 மணிக்குள் படுக்கைகள் நிரம்பிவிடும் நிலைதான் இருக்கின்றது. இதற்கு மிக முக்கிய காரணம் மக்கள் அதிக அளவில் பாதிப்பு  எண்ணிக்கை அதிகரிப்பது தான்.

இந்த நிலையில் என் நண்பர்களின் உதவியோடு ஒரு சில நண்பர்கள் முதலில்   மருத்துவமனைகளில்  மருத்துவர்கள் ஆலோசனை செய்து  மருத்துவர்கள் தற்போது ஆலோசனை வழங்க தயாராக இருக்கிறார்கள் என்ற தகவல்களை திரட்டி பதிவிடுகின்றோம் . இன்றைக்கு பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலும் நாங்கள் இதன் மூலம் உதவி வருகிறோம்.. கிட்டத்தட்ட இன்றைக்கு 50 நபர்களுக்கு மேல் நாங்கள் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு சிலர் முகம் தெரிந்த நண்பர்கள் பலர் முகம் தெரியாத நண்பர்களாகவே உதவி வருகின்றன. எங்கள் இன்ஸ்ட்டாகிராம்  பக்கத்தை பின் தொடரும் நண்பர்களும்  இதற்காக நாங்கள் என்ன செய்ய இயலும் என்று தன்னார்வத்தோடு வந்து எங்களுக்கு உதவி வருகின்றனர்.

மக்களுக்காக அவர்கள் உதவி செய்கிறார்கள் என்பதே மிக முக்கியமான ஒன்று. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நண்பர்கள் நேரடியாகவே மருத்துவமனைகளுக்கு சென்று அல்லது அவர்களுக்கு தெரிந்த மருத்துவர்கள் மூலம் தகவல்களை பெற்று தகவல்கள் உண்மை என உறுதி செய்த பின்னரே அதனை மக்களுக்கு பதிவிடுகிறோம். இதன் மூலம் தவறான தகவல்கள் சென்று விடக்கூடாது என்பது ஒருபுறம் அதே நேரத்தில் சரியான நேரத்தில் அவர்களுக்கு உதவிட வேண்டும் என்பதிலும் நாங்கள் கவனமாக இருக்கின்றோம். இணையதளம் மூலம் இன்றைக்கு உலகம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் போது  உயிர் காக்கும் தளமாக இதை மாற்றுவதற்கான முயற்சி செய்தோம்.

இன்று பல உயிர்களை காப்பாற்றுவதற்கு பெருங்கடலில் ஒரு துளியாக உதவி இருக்கிறோம் என்பதை நினைக்கும் பொழுது மனநிறைவு ஏற்படுகிறது இந்த மன நிறைவுக்காக மட்டுமே மக்களுக்கு உதவி வருகிறோம் என்கிறார் பிரீத்தி.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK