கட்டுப்பாட்டையும் மீறி மாவட்ட ஆட்சியரை நோக்கி ஓடிய மாடு!

கட்டுப்பாட்டையும் மீறி மாவட்ட ஆட்சியரை நோக்கி ஓடிய மாடு!

திங்கட்கிழமையான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நாள் நடைபெறும். கொரோனா காரணமாக மக்கள் மனுக்களை கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை போட்டு செல்கின்றனர்.

Advertisement

முக்கியமான மனுக்கள், போராட்டங்கள் போன்றவற்றில் காவல்துறையினரின் கண்காணிப்புடன் இருவர் மட்டுமே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினரின் கட்டுப்பாட்டையும் மீறி மாவட்ட ஆட்சியர் காரை எடுத்துக் கொண்டு வெளியில் கிளம்பும் சமயம் இந்து மக்கள் கட்சியினர் மனு ஒன்றை அளிக்க வந்ததை பார்த்த மாவட்ட ஆட்சியர் காரை நிறுத்தினர், அப்போது அவர்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தபோது, மாடு ஒன்று அவர் காரை நோக்கி ஓடியது. காவல்துறையினர் அந்த மாட்டை துரத்தவும், விரட்டவும் முயன்றனர் 

இருப்பினும் சிறிது தூரம் ஓடிய பசுமாடு மாவட்ட ஆட்சியரின் காருக்கு முன் ஓரமாய் நின்றது. கடும் கட்டுப்பாடுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மக்கள் நுழையவே அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில் மாடு ஒன்று சர்வசாதாரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஓடிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement