திருச்சியில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிப்பு

திருச்சியில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிப்பு

குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கும், போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்று வருகிறது.

அதனடிப்படையில் குட்கா மற்றும் புகையிலை விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிந்து, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 13 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடத்திய சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் திருச்சி அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ்பாபு முன்னிலையில், பொன்மலை காவல் உதவி ஆணையர் தலைமையில், 3 ஆயிரத்து 600 கிலோ எடையுள்ள 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலை பொருட்களை மாநகராட்சி ஊழியர் தீயிட்டு அழித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn