பாரா ஒலிம்பிக்கே வாழ்க்கையின் ஒரே  லட்சியம் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ள மாற்றுத்திறனாளிகள்

பாரா ஒலிம்பிக்கே வாழ்க்கையின் ஒரே  லட்சியம் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ள மாற்றுத்திறனாளிகள்

"பிறரால் முடிந்தது தன்னால் முடியும் தன்னால் முடிந்தது யாராலும் முடியாது" என்ற நம்பிக்கைதான் வாழ்க்கையை நகர்த்துவதற்கு மிக முக்கியமான ஒன்று.
 இந்த நம்பிக்கையின் பெயரிலேயே தன் வாழ்க்கை பயணத்தை நோக்கி ஓடுகின்றவர்கள்தான் மகேந்திரன், முஹம்மத் ஆஷிக், வெங்கடேஷ் அகியோர்  வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையும் தகர்த்தெறிந்து செல்பவர்கள்    இருக்கிறார்கள் ,வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பவர்களுக்கு எத்தனை தடைகள் வந்தாலும் அதை தாண்டி செல்ல மன உறுதியும் இருந்து கொண்டேதான் இருக்கும் விமர்ச்சகர்களும்  பார்வையாளர்களும்  எங்கும் எப்போதும் அதே இடத்தில்தான் நிற்கிறார்கள்   தோல்வியாளர்களுக்கும் வெற்றியாளர்களுக்கும்  தான் வரலாற்றில் இடம் உண்டு .


நாங்கள் மூவரும் அந்த வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே எங்கள் தீராத கனவு என்று மகேந்திரன் சொல்லும் போது வாழ்க்கையின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை நம்மால் உணர முடிகிறது.
 மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தயம் குண்டெறிதல் மற்றும் கண்பார்வையற்றவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் மாநில அளவில் தேர்ச்சி பெற்று இன்று தேசிய அளவில் கலந்துகொள்ள இருப்பவர்கள்தான் நாங்கள்,
 நான் திருச்சியில் சோழமாதேவி என்னும் சிறு கிராமத்தில் வசித்து வருகிறேன்.

எனக்கு விளையாட்டு மீது மிகுந்த ஆர்வம் உண்டு ஆனால் என்னுடைய குடும்ப சூழ்நிலையால் அதனை என்னால் தொடர முடியாமல் இருந்த போது எனக்கு ஒரு உத்வேகத்துடன் ஊக்கம் அளித்தவர் என்னுடைய பயிற்சியாளர் மணிகண்டன் அவர்கள் தான் மூன்று ஆண்டுகளாக குண்டெறிதல்  போட்டியிக்காக பயிற்சி பெற்று வருகிறேன் எனக்கு தேவையான அனைத்தையும் அவர் தான் அவருடைய நண்பர்களின் மூலமாகவும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலமாகவும் பெற்று எங்களுக்கு உதவி செய்து வருகிறார்.


 அவருடைய ஊக்கமே  எங்களை மேலும் உந்தித்தல்லும் உந்துசக்தியாக இருந்து கொண்டிருக்கிறது.
 எனக்கு குண்டெறிதல் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு அதனை முதலில் பயிற்சி செய்யச் சென்ற பொழுது அதற்கான உபகரணங்கள் ஏதுமின்றி தவித்தேன் அப்போது அவர்தான் முன்வந்து எனக்கு எல்லா உபகரணங்களையும் வாங்கி தந்து இன்று மாநில அளவில் வெற்றி பெறவும் செய்துள்ளார் தேசிய அளவில் வெற்றி பெற்று நாட்டிற்காக விளையாட வேண்டும் பாரா ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய வாழ்நாள் லட்சியமாக நான் கருதுகிறேன் .

இதற்காக எத்தனை இடையூறுகள் வந்தாலும் அதற்கு எதிராக என் மன உறுதியைக்கொண்டு போராடி அதே  மன உறுதியால் வென்று என் வாழ்க்கையிலும் வென்று காட்டுவேன் என்று கூறும் மகேந்திரன் வார்த்தைகள் அனைத்தும்   நம் வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டும் விதமாக இருக்கிறது," ஹெலன் கெல்லர் எப்போதும் ஒரு வார்த்தை கூறுவார்,  நாம் நம்மை நம்பாமல் பிறர் யார் நம்மை முழுமையாக நம்ப முடியும்",  என்று  எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்த அவரின்  வாழ்க்கையை எட்த்துக்காட்டாய்  கொண்டுதான் எங்கள் வாழ்க்கைப்போராட்டமும்  இருக்கிறது என்றார்.


 இவர்களுடைய லட்சிய பந்தயமும் வாழ்வீயல் போராட்டங்கள் பற்றி இவர்களுடைய பயிற்சியாளர் மணிகண்டன் அவர்களுடன் பேசியபோது அவர் விதைத்த வார்த்தைகள் நமக்கும் அதே உத்வேகத்தை அளித்தது நான் திருச்சியில் ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி அளித்து வருகிறேன் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் என்னிடம் பயிற்சி பெற்று வருகிறார்கள்  மாற்று திறனாளிகளுக்கு பயிற்சி அளிப்பதில் மிகுந்த ஆர்வம் எனக்குண்டு ஏனெனில் அவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எப்போதும் நம்மை விட ஒரு படி மேலும் முயற்சிப்பார்கள்,
. மகேந்திரன், வெங்கடேஷ், முகமது ஆசிப் இவர்கள் மூவரும் இன்று மாநில அளவில் வெற்றி பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது இவர்கள் மேலும் பல சாதனைகள் புரிவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு இவர்களின் வெற்றிக்கு இவர்களுடைய விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் தான் காரணம் அதில் ஒரு ஊன்றுகோலாக நான் இருப்பதை நினைத்து எனக்கு பெருமையாக தான் இருக்கிறது மேலும் இவர்களைப் போன்ற பல்வேறு மாணவர்களை உருவாக்கிய நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக நான் கருதுகிறேன்என்றார் சாதிக்க நினைப்பவர்களுக்கு தான் வாழ்க்கையில் ஆயிரம் தடைகள் இருக்கும் இவர்களை பொருத்தவரை அவர்களுடைய மிகப்பெரிய தடையாக இருப்பது அவர்களுடைய பொருளாதார நிலைதான்.

அப்படி இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஏதேனும் உதவும் கரங்கள் இருந்துகொண்டேதான் இருக்கும் தன்னார்வலர்களின்  உதவியால் இதுவரை இவர்களது முன்னேற்றப் பாதையில் அழைத்துச்சென்று கொண்டு இருக்கிறேன் ,மேலும் இவர்கள் பல சாதனைகள் புரியும் பொழுது அரசாங்கமே இவர்களின்  வாழ்க்கைக்கான வழிகாட்டியாக உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

 இன்றைக்கு மாநில அளவில் வெற்றி பெற்ற போது திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் கையால் பரிசுத்தொகையும் சான்றிதழும் பெற்றார்கள் அதே போன்று ஒரு நாள் இவர்கள் பல சாதனை புரிந்து குடியரசுத்தலைவர் கையாளும் பரிசுகள் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவர்கள் மீது இவர் வைத்துள்ள நம்பிக்கையையும் அவர்கள் எவ்வளவு விடாமுயற்சியோடு விளையாடுகிறார்கள் என்பதையும் நமக்கு சான்றாக காட்டுகிறது.
விடாமுயற்சிக்கு எப்போதும் விஸ்வரூப வெற்றி என்பது இவர்களின் வெற்றியே சான்று.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH