திருச்சி மாநகர பகுதியில் காவல்துறையினர் தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் -போக்குவரத்து வசதிகள்- கட்டுபாட்டு விதிகள்

திருச்சி மாநகர பகுதியில் காவல்துறையினர்  தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் -போக்குவரத்து வசதிகள்- கட்டுபாட்டு விதிகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகரம், கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஒவ்வொரு வருடமும் பாதுகாப்புக்காக தேவையான காவல் ஆளினர்களை நியமித்தும், கண்காணிப்பு கோபுரங்கள், CCTV கேமராக்கள், Dome கேமரா மற்றும் பொது விளம்பரங்கள் மூலமாக எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல், குற்றங்கள் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதே போன்று இந்த வருடமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் கீழ்க்கண்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Advertisement

தற்காலிக காவல் உதவி மையம்:

        பொதுமக்களின் பாதுகாப்பை கருதி அவர்கள் தங்களது உடைமைகளையும், குழந்தைகளையும் கவனமாக பார்த்து கொள்ளவும், அசம்பாவிதங்கள் அல்லது சந்தேகப்படும்படியான நபர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கவும், அது சம்மந்தமான புகார் கொடுக்கவும், NSCB ரோடு தெப்பக்குளம் அருகில் தற்தாலிகமாக காவல் உதவி மையம் (Temporary police out-post) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் பொது அறிவிப்பு மையம் (Public Address System), மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு காவல் ஆளினர்கள் மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்கானித்து எவ்வித குற்றச் சம்பவங்கள் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கண்காணிப்பு கோபுரங்கள்: 

       குற்ற நடத்தை உடையவர்களை கண்காணிக்க 8 கண்காணிப்பு கோபுரங்கள் (Watch Towers) 1) NSCB ரோடு, பெரிய கடைவீதி சந்திப்பு (மலைவாசல் அருகில்) 2) சிங்காரத்தோப்பு , பூம்புகார் அருகில் 3) பெரிய கடைவீதி, கரீம் ஸ்டோர் அருகில் 4) மெயின்கார்டுகேட் 5) தெப்பக்குளம் ரகுநாத் ஜங்சன் அருகில் 6) பெரிய கடைவீதி சந்துக்கடை 7) அஞ்சுமன் பஜார், (காந்தி மார்க்கெட்-தஞ்சாவூர் ரோடு சந்திப்பு) மற்றும் 8) பெரிய கடைவீதி முகப்பு (மார்க்கெட் ஆர்ச்) ஆகிய இடங்களில் நிறுவப்பட்டு பைனாக்குலர் மூலம் கண்காணிக்க காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

விரைவுச் சுழல் கேமராக்கள் மற்றும் இரகசிய கண்காணிப்பு கேமராக்கள்:

    குற்ற நடத்தைகாரர்களை கண்காணிக்க தெப்பக்குளம் NSCB ரோடு சந்திப்பில் ஒரு DOME கேமராவும் சின்ன கடைவீதி, சத்திரம் பேருந்து நிலையம், பெரிய கடைவீதி, நந்தி கோயில் தெரு, ஆகிய பகுதிகளில் 23 CCTV கேமராக்களும், மெயின்கார்டுகேட், சிங்காரத்தோப்பு, சூப்பர் பஜார், மதுரை ரோடு, WB ரோடு முதல் ஜாபர்ஷா தெரு ஆகிய பகுதிகளில் 20 கேமராக்களும், சத்திரம் பேருந்து நிலையம், அண்ணாசிலை பகுதிகளில் 84 கேமராக்களும், ஆக மொத்தம் 127 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்ற நடத்தை காரர்களை கண்காணிக்க சத்திரம் பேருந்து நிலையம், NSCB ரோடு ரகுநாத் சந்திப்பு ஆகிய 2 இடங்களில் மானிட்டர்கள் அமைக்கப்பட்டு இயக்குவதற்கு தனித்தனியே காவலர்கள் நியமிக்கப் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மேற்கண்ட கடைவீதிகளில் உள்ள நிறுவனங்களின் வாயில்களில் பொருத்தப்பட்டுள்ள CCTV கேமராக்களும், சாலையை நோக்கி திருப்பி வைக்கப்பட்டு அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் திருச்சி மாநகரில் அமைக்கப்பட்டுள்ள நவீன கட்டுப்பாட்டு அறை மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

தற்காலிக வாகன சோதனை மையங்கள்:

1) நந்தி கோவில் சந்திப்பு

2) 2) சின்னகடை வீதி - பாபு ரோடு சந்திப்பு

3) 3) பெரிய கடைவீதி- தைலா சில்க்ஸ் கிலேதார் ரோடு சந்திப்பு

4) 4) சிங்காரத்தோப்பு பூம்புகார் எதிர்புறம்

மேற்கூறிய இடங்களில் வாகன சோதனை மையங்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், குற்றத்தடுப்புக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

குற்ற ரோந்து:

       குற்ற நடத்தையை கண்காணிக்கவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவும் 100 குற்றப்பிரிவு காவல் ஆளினர்கள் சாதாரண உடையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

பாதுகாப்பு அலுவலுக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் ஆளினர்கள் விபரம்: 

1) சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு:

2)     

3) கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றத்தடுப்பு பணிக்காக திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் அவர்கள் தலைமையில் 2 உதவி ஆணையர், 5 காவல் ஆய்வாளர்கள், 50 சார்பு ஆய்வாளர்கள், 260 காவல் ஆளினர்களும், 100 ஆயுதப்படை காவலர்களும் மற்றும் 100 ஊர்காவல் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

2) குற்ற தடுப்பு பாதுகாப்பு:

        கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றத்தடுப்பு பணிக்காக திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் அவர்கள் தலைமையில் 1 உதவி ஆணையர், 3 காவல் ஆய்வாளர்கள், 10 சார்பு ஆய்வாளர்கள், 50 காவல் ஆளினர்களும், 25 ஊர்காவல் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

3) போக்குவரத்து ஒழுங்கு பாதுகாப்பு:

         தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி 02/11/2020/06:00 மணி முதல் 14/11/2020/07:00 மணி வரை கீழ்க்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

1. இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள்:

      • ஹோலிகிராஸ் மேல்நிலை பள்ளிக்கும் பனானா லீப் உணவகத்திற்கும் இடையில் உள்ள மாநகராட்சி மைதானம். 

      • • யானைக்குளம் மாநகராட்சி மைதானம். 

     • பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளி மைதானம். 

2) நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள்:

      • பழைய குட்ஷெட் ரோடு FSM அருகில் உள்ள இரயில்வே மைதானம். 

      • • கோட்டை இரயில் நிலைய வாகனம் நிறுத்தும் இடம். 

       •பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளி மைதானம். 

3. கீழ்க்கண்ட பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. 

4. • மதுரை ரோடு ( இராமகிருஷ்ணா மேம்பாலம் முதல் காந்தி சிலை வரை) 

5. • மேலபுலிவார்டு ரோடு (தபால் நிலையம் முதல் இப்ராகிம் பார்க் வரை). 

6. • கல்லூரி சாலை. 

7. • கோட்டை இரயில் நிலைய ரோடு. 

4. வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர, மற்ற இடங்களில் எந்தவிதமான வாகனங்களும் நிறத்த அனுமதியில்லை. மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போக்குவரத்து காவல் அதிகாரிகளால் வாகன வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 

5. தள்ளுவண்டி மற்றும் தரைக்கடை வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விற்பனை செய்யக்கூடாது. 

கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கவனத்திற்கு

         தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 02.11.2020/ 06:00 மணி முதல் 14.11.2020/ 07:00 மணி வரை கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றது. 

1. பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி, NSCB ரோடு மற்றும் நந்தி கோயில் தெருவில் கார்கள் மற்றும் ஆட்டோக்கள் செல்ல அனுமதி கிடையாது. இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் அவசர தேவைக்கான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். 

2. ஆட்டோக்கள் மற்றும் வடக்கு ஆண்டாள் வீதியில் சாலையின் ஓரமாக நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு வாணப்பட்டறை மாரியம்மன் கோயில் வழியாக கல்லூரி சாலை வந்து செல்ல வேண்டும். திரும்ப வரும் போது சத்திரம் பேருந்து நிலையம், பட்டவொர்த் ரோடு வழியாக வந்து வடக்கு ஆண்டாள் வீதியில் சாலையின் ஓரமாக ஆட்டோக்கள் நிறுத்தி கொள்ள வேண்டும். 

3. பாபு ரோட்டில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சின்ன கடைவீதி, கிலேதார் ரோடு வழியாக உள்ளே வரக்கூடாது, பாபு ரோட்டில் சாலையின் ஓரமாக ஆட்டோக்களை நிறுத்திக்கொண்டு பயணிகளை ஏற்றி/ இறக்கிச் செல்ல வேண்டும்.