மணப்பாறை நகராட்சி துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

மணப்பாறை நகராட்சி துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

 மணப்பாறையில் இன்று நடைபெற்ற நகர்மன்ற துணைத்தலைவருக்கான மறைமுகத் தேர்தலை திமுகவினர் புறக்கணித்த நிலையில்.போதிய கோரம் இல்லாததால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். 

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற 27 உறுப்பினர்கள் கொண்ட நகர்மன்றத்தின் துணைத்தலைவருக்கான மறைமுகத் தேர்தலை திமுகவினர் புறக்கணித்த நிலையில்.போதிய கோரம் இல்லாததால் ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுகவை சேர்ந்த நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட 10 பேர் மட்டுமே வந்திருந்ததால் போதிய கோரம்( உறுப்பினர்கள் வருகை) இல்லை வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் அலுவலர் மறுத்தனர்.

இதனால், அதிமுகவினர் அதிகாரிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வேட்பு மனு தாக்கல் நேரம் வரை போதிய கோரம்( உறுப்பினர்கள் வருகை) இல்லை என்பதால் நகர்மன்ற துணைத்தலைவருக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அலுவலர் ஆர்.பார்த்திபன் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து தேர்தல் அலுவலரிடம் அதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் கலைந்து சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.co/nepIqeLanO