திருச்சியில் பசியால் வாடுபவர்களுக்கு உணவளித்து உதவி வரும் தாய்-மகள்

திருச்சியில் பசியால் வாடுபவர்களுக்கு உணவளித்து உதவி வரும் தாய்-மகள்

தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை என்பதுபோல் தாய் செய்யும் நற்செயல்களை வாழ்வின் லட்சியமாக மாற்றி தாயின் சமூக பணிகளில் ஈர்க்கப்பட்டு 9 ஆண்டுகாலமாக பல சமூக சேவைகளை  செய்து வருகின்றார் திருச்சியை சேர்ந்த நிவரஞ்சனி.

குழத்தைகள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டிய பண்புகளில் ஒன்று பிறருக்கு உதவுதல். கற்றுத்தந்நதோடு 9 ஆண்டு காலமாக சமூக சேவைகளை செய்ய உற்றத்துனையாய் இருக்கிறார் என் அம்மா சௌந்திரம். நான் கல்லூரியில் இரண்டாமாண்டு இளங்கலை ஆங்கிலம் படித்துது வருகிறேன். என் அம்மா தான் என்னுடைய வழிகாட்டி அவர்தான் இந்த சமூகத்தின் மீதான நம்முடைய ஈடுபாடு வெறும் வாய்ச்சொல் வார்த்தைகளாக இல்லாமல் செயலாக மாற்ற வேண்டும் என்று சொல்லியதோடு அதை செயல்படுத்திக் காட்டியவர்.

நாங்கள் முதன் முதலில் அப்துல் கலாமின் கனவுகளில் ஒன்றான எல்லோரும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற எண்ணத்தோடு பிளாஸ்டிக் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்று செயல்  அமைப்பை தொடங்கினோம். அதன்மூலம் மரக்கன்றுகள் நடுவதன்  அவசியம் பிளாஸ்டிக்கின்  பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். இப்போதும் அச்சேவையை தொடர்ந்து வருகிறோம். ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு உதவுவது, கல்விக்கு உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவுதல்  என்று எங்களுடைய பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் உணவு இன்றியமையாதது ஆனால் சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு உணவு கிடைப்பதில் உள்ள சிக்கல் எங்களை பிசியில்லா உலகம் உருவாக்க வேண்டும் என்று சிந்திக்க தூண்டியது.

குறிப்பாக கொரானா  காலகட்டத்தில் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கும் சாலையோர விலங்குகளுக்கும் உணவு கிடைத்திடும் வகையில்  பல தொண்டு நிறுவனங்களோடு இணைந்து செயல்பட்டு வருகிறோம். தினமும் அவர்களுக்கு மூன்று வேளை உணவு கிடைத்திட செய்ய வேண்டும் என்பதே நோக்கமாக மாறிப்போனது. கொரோனா காலக்கட்டத்தில் அதற்காக பலர் உதவிட முன்வந்தனர். அவர்களோடு இணைந்த போது இவை எளிதில் சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறோம்.

தொடர்ந்து செய்து வரும் இவர்களின் சேவைகளை பாராட்டி புதுச்சேரி வள்ளலார் சேவை இயக்கம் சார்பில் வழங்கும் தமிழ்நாட்டில் சிறந்த தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நபர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளார் நிவரஞ்சனி.இதனைப் போன்றே  பல விருதுகளையும் பாராட்டுகளையும் இருவரும் இணைந்தும் பெற்றுள்ளனர். இங்கு இன்றியமையாத தேவை   உணவும் கல்வியும் தான்.அவை இரண்டும் எல்லோருக்கும் கிடைக்க என்னால் முடிந்த வரை தொடர்ந்து செயல்படுவேன். என்னோடு எனக்கு பக்கபலமாக என் அம்மா இருக்கிறார். அவரை பின்தொடர்ந்து நானும் பயணிக்க வேண்டும் என்று தொடங்கிய பயணம் இன்று இணைந்து பயணிக்கும் பயணமாய் மாறியுள்ளது.

இன்னும் பலருக்கு உணவும் கல்வியும் கிடைத்திட செய்ய வேண்டும்  என்ற நோக்கத்தினையே  என் வாழ்வின் குறிக்கோளாக  கொண்டு உள்ளேன். எனக்குள் இந்த எண்ணங்களை விதைத்தவர் என் அம்மா, அவரின் பண்பும் அவர் இந்த சமுகத்தின் மீதுகொண்ட அக்கறையுமே வாழ்வில் என்னையும் சமுக அக்கறை கொண்ட மனிதராக என்னை உருவாக்கிட உதவியுள்ளது. வாழ்வில் ஆகச்சிறந்த மகிழ்ச்சி பிறரை மகிழ்விப்பதுதான் முடிந்த அளவு  நம்மால் முடிந்த உதவிகளை செய்து வாழ்ந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்கிறார் நிவரஞ்சனி.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn