டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பிற்கு திருச்சி தேசிய கல்லூரி மாணவி தேர்வு

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பிற்கு திருச்சி தேசிய கல்லூரி மாணவி தேர்வு

புது தில்லியில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, திருச்சி தேசிய கல்லூரி மாணவி பபிதா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். நாட்டின் 73 வதுகுடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகா் தில்லியில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்கலைக்கழக, கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் பங்கு பெற உள்ளனா். இதற்காக பெங்களூருவில் அண்மையில் குடியரசு தின அணிவகுப்புக்கான தென்னிந்திய முகாம் நடத்தப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட திருச்சி தேசிய கல்லூரியில் உடற்கல்வி துறை 2ம் ஆண்டு மாணவி பபிதா தில்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ளார்.

அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கத் தோ்வாகியுள்ள மாணவருக்கு கல்லூரியின் செயலாளர் ரகுநாதன் காலமேகம், முதல்வர் சுந்தரராமன், துணை முதல்வரும், உடற்கல்வி துறை தலைவருமான பிரசன்ன பாலாஜி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn