கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு இணைந்து செயல்பட பாப்புலர் ஃப்ரெண்ட் அமைப்பு கோரிக்கை மனு

கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு இணைந்து செயல்பட பாப்புலர் ஃப்ரெண்ட் அமைப்பு கோரிக்கை மனு

இந்தியாவில் கொரோனா  தொற்றின்  இரண்டாவது அலையால் மனதை உலுக்கும்  அளவிற்கு பல மரணங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நோய் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பு பல்வேறு சேவைகளை ஆற்றியது. கடந்த வருடத்தில் அமைப்பின் தன்னார்வலர்களை கொண்டு திருச்சியில் கொரானா  தொற்றால்  இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 35க்கு ம் மேற்பட்டவர்களின் சடலங்களை மத வேறுபாடின்றி அவர்களுடைய மத சடங்குகளை செய்து உடலை அடக்கம் செய்து வருகின்றனர். 

தமிழக அரசு கூறியுள்ள அனைத்து முன்னெச்சரிக்கை, தற்காப்பு நடவடிக்கைகளையும்  கடைப்பிடித்து பிபிஇ கிட்  என்று சொல்லக்கூடிய பாதுகாப்பு கவச உடைகளை அணிந்துகொண்டு பிரேதங்களை அடக்கம் செய்கின்றனர்.

இந்நிலையில் இன்றைக்கு தொற்றால்  இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அரசோடு இணைந்து களப்பணியாளர்களுக்கு உதவியாக  தனது பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்களையும்  பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!

https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd