வரும் முன் காப்போம் என்ற குறிக்கோளோடு மக்களுக்காக உழைக்கும் மருத்துவர் ஹக்கீம்

வரும் முன் காப்போம் என்ற குறிக்கோளோடு மக்களுக்காக உழைக்கும் மருத்துவர் ஹக்கீம்

மருத்துவர்களின் பணி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டும் இல்லை. நோய் வராமல் மக்களை காப்பதும் தான் என்று மக்களின் நண்பனாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர் தான் மருத்துவர் ஹக்கீம். ஆர்வமாகவும், துடிப்பாகவும் தொலைநோக்கு சிந்தனையோடு செயல்படுவதே மருத்துவர் ஹக்கீமின் தனித்துவம் எனலாம்.

திருச்சியில்  துவரங்குறிச்சியில் பள்ளி படிப்பை முடித்த பின், சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரியில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தொடர்ந்து சென்னை  ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தன்னுடைய மருத்துவர் பயிற்சியை தொடர்ந்தார். தற்போது திருச்சி காவேரி மருத்துவமனையில் தன்னுடைய பணியை தொடர்ந்து வருகிறார் .

தன்னுடைய துறையில்  ஆர்வத்தோடு கற்றுக் கொண்டதோடு நில்லாமல் மக்களுக்கு புரியும் வகையில் அதைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் துடிப்போடு செயல்படுபவர். வருமுன் காப்பதே சிறந்தது என்பதை முழுமையாக நம்பும் ஹக்கீம் சமூக வலைதளங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதுமட்டுமின்றி 1200க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக டெலிமெடிசின் மூலமும் ஆலோசனை வழங்கி வருகிறார்.

இந்த கொரானாகாலகட்டத்தில்  சமூக அக்கறையோடு இவர் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் மக்களுக்கு பல வகைகளில் உதவியுள்ளது. செவித்திறன் மற்றும் பேசும் குறைபாடு உள்ளவர்களுக்கு பயன்படும் வகையில் வெளிப்படையாக தெரியும் வகையில் மக்கும் தன்மையுள்ள முககவசத்தை உள்ளூரில் இருக்கும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அவர்களை வைத்தே தயாரித்துள்ளார்.

எல்லா வகையிலும் பொதுமக்களுக்கு எப்படி உதவுவது என்ற சிந்தனையோடு செயல்பட்டுக் கொண்டிருப்பவர். உயிர்த்துளியுடன் கைகோர்த்த பிறகு கொரானா  நோயாளிகளுக்கு  பிளாஸ்மா சிகிச்சைக்கு இவருடைய யுக்திகள்முக்கிய பங்கு வகித்தன. 200க்கும் மேற்பட்டவர்கள் பிளாஸ்மாவை பெற உதவியுள்ளது கொரோனா நோய்த்தொற்று தொடர்பான  சந்தேகம் உள்ளவர்களுக்கு இலவசமாக ஆலோசனை வழங்கி வருகிறார். கொரோவை எதிர்கொள்வதற்கு நம்மிடம் இருக்கும் சிறந்த ஆயுதமான தடுப்பூசி அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி முகாம்கள் நடத்துவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறார். கொரோனா தடுப்பு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக திருச்சியிலிருந்து முதல் முதலாக நிவாரணம் அளித்து உதவியது மருத்துவர் ஹக்கீம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு மருத்துவ துறையில் மருத்துவர் ஹக்கீம் சமூக ஊடகங்கள் மூலமாகவும், கட்டுரைகள் மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மிக முக்கிய ஒருவராக செயல்பட்டு வருகிறார். தன் துறையின் மீது அதீத பற்று கொண்டு மக்களுக்கு உதவும் வகையில் பல முன்னேற்ற நடவடிக்கைகளில் ஓய்வின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவர் ஹக்கீம் திருச்சியின் ரியல் ஹூரோ.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC