தமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்க காத்திருக்கும் திருச்சி விமானி!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்க காத்திருக்கும்  திருச்சி விமானி!!

Advertisement

வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2021 என்பது தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாறுதலை எதிர் கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும். திருச்சி என்பது அரசியல் களத்தில் திருப்புமுனையாக அமையும் ஒரு மாநகரம். அதனால்தான் அனைத்து கட்சியினரும் தங்களுடைய பொதுக்குழு கூட்டத்தை முதலாவதாக திருச்சியில் இருந்து தொடங்க ஆரம்பிப்பார்கள்.

Advertisement

அரசியல் களத்தில் மாற்றத்திற்காக ஒரு மாநகரமாக இருப்பதால் தற்போது வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் முதல் முறையாக திருச்சியை சேர்ந்த விமானி ஒருவர் விருப்ப வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

 திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் Capt. E.அசோக் ராஜா. இவர் விமானியாக பணியாற்றி வருகிறார். திமுகவில் மண்ணச்சநல்லூர் பகுதி இளைஞரணி பிரமுகராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற விருப்ப மனு தாக்கல் நிகழ்வில் திருச்சியை சேர்ந்த விமானி அசோக் ராஜா மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து திருச்சி விமானி அசோக் ராஜா கூறுகையில்.... வருகின்ற தேர்தலில் இளைஞர்கள் முன்னுரிமை அளிக்கப்படும் என நினைக்கிறேன். அதன் பொருட்டு என்னுடைய ஊரான மண்ணச்சநல்லூர் தொகுதியில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். சமீப காலமாக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நிர்வாகத்தில் பல இளைஞர்கள் கொண்டு வரும் கண்ணோட்டமாக இருந்து வருகிறது. என்னைப் போலவே பல இளைஞர்கள் அரசியலில் பங்களிக்க விரும்புகிறார்கள். தலைவர் ஸ்டாலினுடன் கைகோர்த்து உயர்தர மிக்க தமிழகத்தை உருவாக்குவோம்" என்றார்.

Advertisement

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக நம்ம ஊரை சேர்ந்த இளைஞரும் விமானியும் தேர்தலில் களம் இறங்குவது என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH