திருமணத்தை முடித்த கையோடு ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு அசத்திய புதுமணத்தம்பதி

திருமணத்தை முடித்த கையோடு ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு அசத்திய புதுமணத்தம்பதி

திருச்சி வயலூர்  முத்துலெட்சுமி அம்மாள் திருமண மண்டபத்தில் மனோஜ் தர்மர் - திவ்யா தம்பதிகள் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் விழாவிலும் நெகிலியில்லாமல் நடைபெற்றது. தனது திருமண விழா  அழைப்பிதழ் மண்ணுக்கு சென்றாலும் விதை விருட்சமாக உருவாகும் வகையில் அழைப்பிதழை அமைத்துள்ளார். வெறும் வார்த்தை இல்லாமல் செயலிலும் மற்றவர்களுக்கு கொண்டு  முன்னுதாரணமாக செயல்படுத்தியும் காட்டிவிட்டார். 

இதையடுத்து வார்த்தையளவில் மரம் நடுவது இருக்கக்கூடாது குறுங்காடுகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் வாழ்ந்துவரும் இவர் தனது இல்லற வாழ்க்கையில் தொடங்கிய நாளிலேய ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு தனது சமூக பணியை தொடர்ந்து கொண்டே இருப்பேன் என பசுமரத்தாணி போல் நிரூபித்து விட்டார்.  

(06.12.2021) அன்று மனோஜ் தர்மர் - திவ்யா மண விழாவிற்க்கு வருபவர்கள் பணமோ, பரிசு பொருட்களோ கொண்டு வரவேண்டாம் என்பது எங்களது வேண்டுகோள். திருமணத்திற்க்கு வருபவர்கள் எங்களை வாழ்த்தி விட்டு   இருங்களூர் (மழை ஈர்ப்பு மையம்) அடர்வனக்காடுகள் (SRM மருத்துவக்கல்லூரி எதிரில்) 1000 மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்று
உங்கள் பங்களிப்புடன் அன்பளிப்பாக ஒரு மரக்கன்று நட வாருங்கள் அழைப்பும் விடுத்திருந்தார்.

புதுமண தம்பதிகள் திருமண மண்டபத்தை விட்டு நேரடியாக அடர்வன காடுகள் இருக்கும் பகுதிக்கு சென்றனர். அங்கு பணி புரியும் வயதான பெண்கள் இவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். தலையில் பூக்களால் ஆன கிரீடம் அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர். கைதட்டி , பாட்டு பாடி நடனமாடி புதுமண தம்பதிகளை உள்ளே அழைத்து சென்றனர். புதுமணத் தம்பதிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் இருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட் உள்ளிட்டோரும் விளையாட்டு இப்போட்டிகளில் பங்கேற்றனர்.

லட்சக்கணக்கில் செலவு செய்து உறவினர்களை அழைத்து விருந்து வைத்து திருமண விழாவை நடத்துவதை அனைவரும் பார்த்து பங்கேற்று வருகிறோம். ஆனால் தங்கள் இல்லற வாழ்க்கையைத் துவங்கும் நாளிலேயே நேரடியாக சென்று ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் மனிதவளத்தை மரம் காக்கும் என்ற ஆழமான கருத்தையும் இத் தம்பதிகள் உணர்த்தியுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn