திறமையை வளர்க்கலாம்! மதிப்பை உயர்த்தலாம்!- வித்யா

திறமையை வளர்க்கலாம்! மதிப்பை உயர்த்தலாம்!- வித்யா

எங்கோ ஒரு கிராமத்தின் மூலையிலோ அல்லது நாம் அன்றாடம் கடந்துபோகும் தெருக்களிலோ பல திறமைசாலிகள் தங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஏதோ ஒரு வேலையை செய்துகொண்டு முடங்கிக் கிடப்பது கவனித்துப் பார்ப்பவர்களுக்குப் புரியும். ஏன் இவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளவில்லை? நமது திறமை முழுதாய் மிளிர செய்ய வேண்டியவை என்ன?  

இப்படி பல கேள்விகளுக்குபதில் ஊக்குவிப்பவர்கள் ஊக்குவித்தால் ஊக்குவிப்பவனும் தேக்கு விற்பான் என்ற வரிகளைப் போல பிறரின் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவி வருகிறார் திறன் மேம்பாட்டு பயிற்சியாளராக இருக்கும் வித்யா. தஞ்சாவூர் தான் என் சொந்தஊர். பள்ளி படிப்பு பத்தாம் வகுப்பு என்றாலும் தனித்திறமைகள் எனக்கான வழிகாட்டியது அப்போதுதான் உணர்ந்தேன் ஏன் நாம் தனித்திறமைகளை பிறருக்கு மிகவும் பயனுள்ளதாக செய்து கொள்ளக் கூடாது என்று திறன் மேம்பாட்டு பயிற்சியை கடந்த 17 ஆண்டுகளாக அளித்து வருகிறேன்.

பேப்பர் கிராஃப்ட், நகை செய்யும் பயிற்சி, தையல் பயிற்சி,ஆரி எம்பிராய்டரி பயிற்சி, வெப் டிசைனிங்,மெஹந்தி பயிற்சி, பியூட்டிஷியன் இப்படி பலதரப்பட்ட பயிற்சிகளை அளித்து வருகிறோம். இதுவரை 5000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். முதலில் பள்ளி மாணவர்களுக்கு தொடங்கப்பட்டது. இன்று கல்லூரி மாணவர்களுக்கு சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு என்று இந்த பயிற்சிஅடுத்தடுத்த கட்டங்களில் பல தொழில் முனைவோர்களை உருவாக்கி வருகிறது. இங்கு வாய்ப்புகளும் வசதிகளும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இங்கு ஒவ்வொருவருக்குமே தனித்திறமை என்பது இருக்கத்தான் செய்கிறது.

நாம் தனித்திறமைகளை கண்டறிந்து அதனை மேம்படுத்தினாலே நம் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று பலருக்கு சுய தொழில் செய்வதற்கும் இல்லை ஒரு நிறுவனத்தில் பணி புரிவதற்குமே நாங்கள் உதவி வருகிறோம்.  இவை அனைத்திற்குமே காரணம் அவர்களிடம் இருக்கும் திறமையே!அவர்களின் தனித்திறமையை இந்த உலகிற்கு வெளிக்கொண்டு வரச் செய்வது செய்வது மட்டுமே எங்களுடைய பணியாக இருந்து வருகிறது என்கிறார் வித்யா...

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision