52 வயதில் தனக்கென ஒரு அடையாளம் - கலைநயம் சாரீஸ் உமா வளவன்
நம் திறமைகளை இவ்வுலகிற்கு பறைசாற்றுவதற்கு வயது ஒரு தடை இல்லை. நமக்கு பிடித்தவற்றை செய்வதற்காக நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் ஒருநாள் அதற்கான பாதையை நாம் கண்டறிந்து விடலாம் என்கிறார் உமா வளவன்.
திருச்சி தென்னூர் சாலையில் கலைநயம் சாரீஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். தன் குடும்பத்திற்காகவும், தன் குழந்தைகளுக்காகவும் வாழ்ந்தவர். இப்போது தனக்கான அடையாளத்தை தொடங்கியிருக்கிறார் உமா வளவன்.
தன்னுடைய புதிய தொடக்கத்தை குறித்து உமாவளவன் கூறுகையில்... சிறுவயதில் இருந்து எனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. எல்லா பெண்களைப் போன்றே எனக்கும் குடும்பமா தன்னுடைய ஆசையா என்ற போது குடும்பத்தினை தேர்வு செய்தேன்.
குழந்தைகளின் கல்வி அவர்களுடைய வாழ்க்கை எதிர்காலம் என்று அவர்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். பிள்ளைகள் இன்றைக்கு அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். இதுவரை நம் கடமைகளை சரியாக குடும்பத்திற்காக செய்துவிட்டோம். எனக்காக என்ன செய்து கொண்டேன் என்று கேள்வி எழுந்த போது எனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதே அதற்கான தீர்வாக இருக்கும் என்று எண்ணினேன்.
ஒட்டுமொத்த குடும்பமும் எனக்கு அதற்கான வாய்ப்பையும், ஆதரவையும் அளித்தார்கள். என் கணவருடைய உறவினர்கள் இருவர் இதனை தொடங்குவதற்கான முதல் முயற்சியில் இருந்து இன்று வரை என்னோடு தொடர்ந்து பயணித்து வருகின்றனர். அவர்களுடைய உதவியோடு இன்றைக்கு திருச்சியில் கலைநயம் சாரீஸ் என்ற கடையை மார்ச் 2021இல் தொடங்கினேன்.
பெண்களுக்கு பிடித்த எல்லா வகையான ஆடைகளை விலையும் குறைவானதாக விற்பனை செய்து வருகிறேன். இங்கு எனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே கலைநயம் சாரீஸ்.
நமக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதில் என்றைக்கும் நாம் உறுதியாக இருக்க வேண்டும். 52 வயதில் என்னால் இதை தொடர முடியும் எனில் இங்கு சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்களாலும் அதனை சாத்தியப்படுத்த முடியும் என்கிறார் உமா வளவன்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn