திருச்சி வழக்கறிஞர்கள் 8 பேர் இடைநீக்கம்
திருச்சி நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் கண்ணன், துணைத் தலைவர் சிவக்குமார், பொருளாளர் சசிகுமார், இணைச் செயலாளர் நவநீதிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இ பைலிங் உயர்நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால், அது நடைமுறைக்கு வரும்போது பொதுக்குழு கூட்டி தீர்மானித்துக் கொள்வது,
சங்க நலனுக்கு எதிராகவும், வழக்கறிஞர் தொழிலின் மாண்பை கெடுக்கும் வகையிலும் செயல்பட்ட வழக்கறிஞர்கள் மாரியப்பன், சரவணன், முத்து மாணிக்கவேலன், ரவிச்சந்திரன், விஜய் அகிலன், தனசேகரன், சுரேஷ் குமார், ராஜூ ஆகியோர் குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைப்பது,
இக்குழு முறைப்படி விசாரித்து அறிக்கை அளிக்கும் வரை 8 பேரையும் சங்கத்திலிருந்து இடைநீக்கம் செய்வது, ஜாக் தீர்மானத்தின் படி நாளை 11ம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட நீதிமன்றம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டன.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision