உலக மனநல தினம் - தேசிய கல்லூரியில் திருச்சி காவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி!!

உலக மனநல தினம் - தேசிய கல்லூரியில் திருச்சி காவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி!!

உலக மனநல தினத்தை முன்னிட்டு திருச்சி தேசியக் கல்லூரியும் திருச்சி காவல்துறையும் இணைந்து சுமார் 50க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு இன்று புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் காவலர்களுக்கு யோகா, நடனம் உடற்பயிற்சி, சிலம்பம் மற்றும் விளையாட்டுகள் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் அவர்களுக்கு ஒரு புதிய ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் உலக மனநல தினத்தை முன்னிட்டு இன்று இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது. இதில் காவலர்கள் உற்சாகமுடன் மகிழ்ச்சியுடனும் கலந்துகொண்டு பயிற்சிகளை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வானது திருச்சி தேசியக் கல்லூரியில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் திருச்சி மாநகர சட்ட ஒழுங்கு காவல் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி, தேசிய கல்லூரி துணை முதல்வரும் உடற்கல்வி துறை தலைவருமான பிரசன்ன பாலாஜி, காவல் உயர் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.