திருச்சியில் காவலர்களுடன் களத்தில் இறங்கி பயிற்சி மேற்கொண்ட டிஐஜி!!

திருச்சியில் காவலர்களுடன் களத்தில் இறங்கி பயிற்சி மேற்கொண்ட டிஐஜி!!

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான தற்காப்பு கலை பயிற்சி நடைபெற்றது .இதில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா கலந்துகொண்டு தற்காப்பு பயிற்சி மேற்கொண்டார்.

திருச்சி மாவட்டத்தில் ஆயுதப் படையில் பணிபுரியும் 122 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ,ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் உள்ளிட்டோர் அனைவருக்கும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.

Advertisement

இன்று நடைபெற்ற பயிற்சியில் தற்காப்பு கலை பயிற்சி ஜூடோ, கராத்தே பயிற்சிகள் பயிற்சியாளர்களை வைத்து பயிற்சி கொடுக்கப்பட்டது. அப்போது திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா,
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் கலந்துகொண்டார்கள்.

திடீரென மைதானத்தில் பயிற்சி உடையில் இறங்கிய திருச்சி சரக டிஐஜி 122 ஆயுதப்படை காவலர்கள் உடன் தானும் பயிற்சியில் ஆக்ரோஷத்துடன் ஈடுபட்டார். திருச்சி சரக டிஐஜி பயிற்சியில் கலந்து கொண்டது  பயிற்சியில் ஈடுபட்ட  காவல்துறையினரிடம் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.