சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.10,000/- அபராதம்

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.10,000/- அபராதம்

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளின் எதிரிகள் மீது பதிவு செய்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த (07.09.20)-ந் தேதி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது வீட்டின் அருகாமையில் விளையாட சென்ற தனது மகளை ஆசை வார்த்தை கூறி வன்புணர்வு செய்துவிட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் ஜான் மேக்சிம் (40) த.பெ. பாஸ்டின் என்பவர் மீது கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ (POCSO) சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வழக்கின் எதிரி ஜான் மேக்சிம்-ஐ கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, மேற்படி எதிரி ஜான் மேக்சிம் மீது கடந்த (11.03.2020)-ந் தேதி குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தும், மேற்படி வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவட்சன் நீதிமன்ற விசாரணையை முடித்து, இன்று (18.03.2024)-ம் தேதி, மேற்படி எதிரி ஜான் மேக்சிம் என்பவருக்கு போக்சோ ச/பி 5(1) ன்படி 20 வருட சிறைத்தண்டனையும், அபராதம் ரூ.10,000/- ம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5,00,000/- இழப்பீடுத்தொகை வழங்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜாகீர் உசேன் ஆஜராகி அரசு சார்பாக வழக்கு நடத்தி வாதாடினார்.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அப்போதைய ஆய்வாளர் ஆனந்த வேதவள்ளி, புலன்விசாரணையில் உறுதுணையாக இருந்த காவல் ஆளிநர்களையும், நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்ப்படுத்திய தற்போதைய கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் செல்வமலர் மற்றும் நீதிமன்ற பணிபுரிந்த காவல் ஆளிநர்களையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, வெகுவாக பாரட்டினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision