பெண்கள் பெருமைப்பயணம் -பிஷப் ஹீபர் கல்லூரியின் மகளிர் தின கொண்டாட்டம்

பெண்கள் பெருமைப்பயணம் -பிஷப் ஹீபர் கல்லூரியின் மகளிர் தின கொண்டாட்டம்

மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெண்கள் பெருமை பயணத்தைப் பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வர்(அரசுதவிப்பிரிவு)துணை முதல்வர் (சுயநிதிப்பிரிவு)
விரிவாக்கப்புலத்தினன் முதன்மையர் , IQAC முதன்மையர் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சாதனா (மகளிர் அமைப்பு)வரவேற்றனர் .
வரவேற்பை தொடர்ந்து பெண்கள் அதிகாரம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட கருத்தரங்கு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத் துறையின் தலைவரும், இணை பேராசிரியருமான முனைவர் ஃபெமிலா அலெக்சாண்டர் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார் .நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினர்களாக மும்தாஜ் சிம்ரினின் பானு சமூக சேவகர்;இன்பான்டா அனிஷா மருத்துவர் மற்றும் சுகி நிகழ்வு திட்டமிட்டுபவர் ஆகியோர் பங்கேற்றனர் .


பெண்கள் பெருமை பயணத்தைசேர்ந்த   சிறப்பு விருந்தினர்கள் ,நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்களுடனும்  சாதனா அமைப்பு மாணவர்களுடன் உரையாடினர் .
பாலின உணர்திறன், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், சுயமரியாதை, உடல் நேர்மறை தொடர்பாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்த பெருமைமிக்க சந்தர்ப்பத்தில், வரவேற்புரையை பிஷப் ஹீபர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் டாக்டர் சை.அன்னாள் எழில்செல்வி வரவேற்புரையாற்றினார்.


கல்லூரியின் சாதனா மகளிர் அமைப்பு தலைவர் முனைவர் ஜே அருணா அவர்களால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது மற்றும் நன்றியுரையை பிஷப் ஹீபர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தின் மாணவத்தலைவர் மற்றும் இணை செயலாளர்
 ஜாய்ஸ் வழங்கினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I