25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் - நாளை வேடபரி திருவிழா

25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் - நாளை வேடபரி திருவிழா

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் சிறப்பு வாய்ந்த பால்குடவிழா இன்று வெகுவிமர்ச்சையாக நடந்து வருகிறது. 

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கிய திருவிழாவில் இன்று காலை 7 மணிக்கு அருள்மிகு வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து கோவில் பரம்பரை அறங்காவலர் வீரமணி தலைமையில் பால்குடங்கள் புறப்பட்டு ராஜவீதிகளின் வழியாக பால்குட ஊர்வலம் அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.

இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் குழந்தை வரம் வேண்டுபவர்கள் கரும்புத்தொட்டில் கட்டி வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைத்து பால்குடங்களும் கோவிலுக்கு வந்தடைந்தபின் 3 லட்சம் லிட்டர் பாலால் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

நாளை (14.05.2023) நடைபெறும் வேடபரி திருவிழாவில்  லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். திருவிழாவையொட்டி டி.எஸ்.பி ராமநாதன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn