"இளைஞர் ஒளிர் கவின் உலகு" என்ற குழுவின் மூலம் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை - ஆணையர் லோகநாதன் பேட்டி!!

"இளைஞர் ஒளிர் கவின் உலகு" என்ற குழுவின் மூலம் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை - ஆணையர் லோகநாதன் பேட்டி!!

திருச்சியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இளம் வயதில் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அடாவடியான பல செயல்களில் இறங்கி வருகின்றனர். சமீபத்தில் பிராட்டியூர் பகுதியில் இரவு நேரங்களில் வருபவர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் கஞ்சா போதையில் இருந்ததாக தெரிய வந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் திருச்சியில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடம் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருச்சி மாநகர காவல்  ஆணையர் லோகநாதன்....  இதுபோன்ற கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்கும் வகையில் "இளைஞர் ஒளிர் கவின் உலகு" என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் விழிப்புணர்வு மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், 

இருசக்கர வாகனத்திற்கென திருச்சியில் தனி வழி சாலைகளில் ஏற்படுத்தப் பட்டுள்ள நிலையில், அதனை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையும் தொடர்ந்து வருகிறது.

செயின் பறிப்பு சம்பவங்கள் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.