திருச்சி முக்கொம்பில் அமைச்சர் உதயநிதி - ஆர்ப்பரித்து வரும் நீரை ஆய்வு

திருச்சி முக்கொம்பில் அமைச்சர் உதயநிதி - ஆர்ப்பரித்து வரும் நீரை ஆய்வு

திருச்சி முக்கொம்பிற்கு ஒரு லட்சத்து 17 ஆயிரம் ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 31 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றிலும், 86 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும், திறந்து விடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் அரசு திட்டங்களை ஆய்வு செய்தும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி நேற்று திருச்சி வந்தடைந்தார்.

காலை அன்னூர் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தினை ஆய்வு செய்தார். பின்னர் துறையூர் செல்லும் வழியில் திருச்சி முக்கொம்பில் இறங்கி காவிரி கொள்ளிடத்தில் செல்லும் நீரினை நேரில் பார்வையிட்டார்.

கொள்ளிடம் கதவணையில் வரும் நீரின் அளவை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் கேட்டுறிந்தார். உடன் அமைச்சர்கள் நேரு மகேஸ் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். முக்கியமாக திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை அமைச்சர் உதயநிதியிடம் ஆட்சியர் குறிப்பிட்டார். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளவைகளையும் தெரிவித்தார். கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார். திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் கதவணையில் பாதுகாப்பிற்கு மாநகர தீயணைப்பு நிலைய அதிகாரி சத்தியவர்தன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர் .தொடர்ந்து நீரின் அளவை கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கொம்பில் ஆய்வின்பொழுது அமைச்சர் உதயநிதியுடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன்  இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision