திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயத்தில் ஆடிப்பூர தெப்பத் திருவிழா- ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயத்தில் ஆடிப்பூர தெப்பத் திருவிழா- ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் ஒன்றானதும், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தரால் பாடல்பெற்றதும், அகிலத்தை காப்பவள் என்பதால் அகிலாண்டேசுவரி என்ற பெயரில் விளங்கும் திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேசுவரி ஆலயத்தில் ஆடிமாதத்தின் போது அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம். 

இத்தலத்தில் ஆடிமாத வழிபாடு மற்றும் ஆடிப்பூரம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி கடந்த மாதம் 25ம்தேதி ஆடிப்பூரத் திருவிழா அகிலாண்டேஸ்வரி சன்னதியில் உள்ள தங்ககொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனையடுத்து ஒவ்வொருநாளும் ரிஷபவாகனம், சிம்மவாகனம், கோரதம் உள்ளிட்ட பல்வேறுவாகனத்தில் அம்பாள் அலங்கரிக்கப்பட்டு உள்வீதிகளில் உலா வந்தார்.

ஆடிப்பூரத்தின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் இன்று ஆடிப்பூரக்குளத்தில் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பிள்ளையார், வள்ளி தெய்வாணையுடன் உள்ள சுப்ரமணியன், சண்டிகேசுவரருடன் அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேசுவரர் ஆகியோர் எழுந்தருளி 5 முறை வலம் வந்து தெப்போற்சவம் கண்டருளினர். இதில் பெருந்திராளன பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

முன்னதாக அகிலாண்டேசுவரி, ஜம்புகேசுவரர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு வீதிகளில் வீதிஉலா வந்து அதன்பின்னர் தெப்போற்சவம் கண்டருளினார்.தொடர்ந்து நவராத்திரி மண்டபத்தில் ஆடிப்பூரத்தையொட்டி பரதநாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO