திருச்சியில் ஆகஸ்ட் -7ல்உணவு திருவிழா

திருச்சியில் ஆகஸ்ட் -7ல்உணவு திருவிழா

திருச்சி மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி பிஷப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை இணைந்து வழங்கும் EAT RIGHT MELA உணவு திருவிழா நடைபெற உள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் உள்ள பிரபலமான உணவுகளின் உணவு அரங்குகள் இடம்பெறும்.

அதனை தொடர்ந்து சின்னத்திரை புகழ் மதுரை முத்துவின் நகைச்சுவை பட்டிமன்றம் விஜய் டிவி சூப்பர் சிங்கர் பாடகர்கள் கலந்து கொள்ளும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் திருச்சி கலைக்காவிரி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் திண்டுக்கல் சக்தி பண்பாட்டு குழுவின் கிராமிய கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும்.

முதல்வரின் சட்டமன்ற அறிவிப்பினை ஒரு லட்சம் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் உலக சாதனை நிகழ்வு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இவை அனைத்தையும் கண்டு மகிழ பல்வேறு மாவட்டத்தில் உணவுகளை  ருசிக்கவும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO