திருச்சி உத்தமர்சீலி தரைப்பாலம் மூழ்கி 200 ஏக்கர் வாழை நாசம் வேதனை
தரைப்பாலத்தில் ஆபத்தை உணராமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். காலை பள்ளிக்கு செல்வோர் கல்லணை பகுதியில் இருந்து திருச்சிக்கு வரக்கூடிய வருபவர்கள் இங்கிருந்து அங்கே செல்லக்கூடியவர்களும் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் கடந்து செல்லும் பொழுது பழுது ஏற்படும் நிலை காணமுடிந்தது.
உத்தமர் சீலி ஊராட்சி இந்த தரைப்பாலத்தில் பொதுமக்கள் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்டவைகளை அழைத்து செல்லக்கூடாது என்று அறிவிப்பு பலகையும் வைத்து எச்சரிக்கை கொடுத்துள்ளனர். அதையும் தாண்டி சிறு குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு செல்வதும் சிறுவர்கள் தண்ணீரில் கடப்பதும் பார்க்க முடிகிறது.
விவசாயிகள் தங்களின் ஆறு மாத வாழை பயிர் நீரில் மூழ்குவது தடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதுவரை அதிகாரிகள் வரவில்லை என்ற குற்றச்சாட்டையும் விவசாயிகள் முன்வைக்கின்றனர். உடனடியாக தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர். நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து திருச்சி முக்கொம்பிற்கு வரும் நீரின் வரத்தை கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.