குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே எம்.புதுப்பட்டி ஊராட்சியை சேர்ந்த மேட்டுப்பட்டி, அட்டாளப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் சரிவர விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வந்த நிலையில், அதிருப்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று முசிறி - தாத்தையங்கார்பேட்டை செல்லும் சாலையில் மேட்டுப்பட்டி பேருந்து நிறுத்தம் முன்பாக காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முசிறி காவல் ஆய்வாளர் கதிரேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் எம்.புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதித்தது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision