திருச்சியில் காவல்துறை தடையை மீறி போராட்டம் நடத்தியதாக 460 பேர் மீது வழக்குப்பதிவு
பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக் கோரி நேற்று முன்தினம் பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணியினர் திருச்சி மேலப்புதூர் சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். காவல்துறை அனுமதியை மீறி போராட்டம் நடத்தியதாக பாரதிய ஜனதா கட்சியினர் 200 பேர் மீது கண்டோன்மெண்ட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் விவசாய இடுபொருள்கள் இரண்டு மடங்கு லாபம் கேட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இவர்களின் 160 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல் திருச்சி மத்திய சிறையில் 20 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி திருச்சி மத்திய சிறை முன்பு போராட்டம் நடத்திய முஸ்லிம் அமைப்பினர் 100 பேர் மீது கே.கே. நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn