சாலை பாதுகாப்பு பேருந்துகளின் குறைபாடுகள் அதிகாரிகள் ஆய்வு

சாலை பாதுகாப்பு பேருந்துகளின் குறைபாடுகள் அதிகாரிகள் ஆய்வு

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தம் பகுதியில் மாணவ மாணவிகளின் சாலை பாதுகாப்பு பேருந்துகளின் குறைபாடுகள் தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில், முசிறி பணிமனை மேலாளர் தண்டாயுதபாணி, குளித்தலை பணிமனை மேலாளர் ராஜேந்திரன்,

திருச்சி நகர துணை மேலாளர் சுரேஷ் பார்த்திபன், விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராணி, திருப்பராய்த்துறை ஊராட்சி மன்ற தலைவர் பிரகாசமூர்த்தி மற்றும் விவேகானந்தா ஆரம்பப்பள்ளி நிர்வாக அதிகாரி ரங்கசாமி, ஓய்வு பெற்ற முன்னாள் விமானப்படை அதிகாரி தங்கசாமி ஆகியோர் ஆய்வு பணிகளில் கலந்து கொண்டனர். 

மேற்கண்ட ஆய்வு பணிகளில் அனைவரின் கருத்துகளை கேட்டறிந்தும், நேரில் பார்வையிட்டும் அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலம் பொது மேலாளர் காலை, மாலை இரு வேளை மாணவ மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஆவண செய்வதாகவும், மேலும் அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலம் சார்பாக பேருந்து நிறுத்ததில் தினசரி பரிசோதகர் ஒருவரும், அலுவலர்களுடன் பணி புரிவார்கள் என்றும் கூறி உள்ளார்.

மேலும் பேருந்து நிறுத்தம் பகுதியில் திருச்சி - கரூர் செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் நின்று செல்ல ஆவண செய்ய வேண்டும் என திருப்பராய்துறை ஊராட்சி தலைவர் பிரகாச மூர்த்தி கோரியதை தொடர்ந்து அக்குறைபாடுகள் தொடர்பாக தீர்வு காணபடும் என்றும், பேருந்து நிறுத்தங்களில் அனைத்து பேருந்துகள் நின்று செல்லவும், நிற்காத பேருந்துகள் தொடர்பாக என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரலாம் என்றும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகள் பேருந்து படியில் பயணத்தை தவிர்க்க வேண்டும் அறிவுறுத்தி உள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision