தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கொரோனா காரணமாக கடந்த ஒன்னரை ஆண்டுக்கு மேலாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது.வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது.தேர்வுகளும் ஆன் லைனிலேயே நடத்தப்பட்டன.இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.தேர்வுகள் அனைத்தும் நேரடியாகவே நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பல மாதங்கள் வகுப்புகளை ஆன் லைனில் நடத்தி விட்டு தற்போது தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.நேரடி தேர்வு வைத்தால் மாணவர்கள் மன அழுத்ததிற்கு ஆளாவார்கள் எனவே தமிழக அரசு  இந்த செமஸ்டர் கல்லூரி தேர்வுகளை ஆன் லைனில் தான் வைக்க வேண்டும். இக்கோரிக்ககளை வலியுறுத்தி திருச்சியில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் 300 க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அங்கிருந்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn