பேருந்து படிக்கட்டில் பயணம் தவிர்க்க திருச்சியில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்
அரசு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம் லிமிடெட்) திருச்சி மண்டல எல்லைக்குட்பட்ட திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் பயன்பாடு அதிகம் இருக்கும் நேரங்களில் பேருந்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 10 கூடுதல் பேருந்துகள் மூலம் 24 குறுநடைகள் கீழ்க்கண்ட ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
பேருந்தில் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதன் மூலம் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் எதிர்பாராத விதமாக பேருந்து செல்லும் போது தடுமாறி பேருந்து படிக்கட்டு பகுதியில் இருந்து கீழே விழுந்து பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். அதனை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி படிகட்டு பகுதியில் பயணம் சென்று அதனால் பாதிக்கும் மாணவர்கள் பயணிகளின் நலன் கருதி திருச்சி மண்டலத்திற்குட்பட்ட திருச்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகளின் பயன்பாடு அதிகம் இருக்கும் நேரங்களில் பேருந்து கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 10 பேருந்துகள் மூலம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள நெம்1 டோல்கேட், திருவரம்பூர், பஞ்சப்பூர், ஆலம்பட்டி புதூர், சோமரசம்பேட்டை, கொத்தம்பட்டி ஆகிய ஊர்களுக்கு 6 பேருந்துகள் மூலம் 16 குறுநடைகள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் திருச்சி மண்டலத்தின் முக்கிய பேருந்து நிறுத்தங்களில் காலை மற்றும் மாலை பயணிகளின் அடர்வு அதிகமாக உள்ள நேரங்களில் கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து படிக்கட்டு பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தியும் கண்காணிப்பு செய்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn