திருச்சியில் பக்ரீத் ஈகைத் திருநாள் தொழுகை - கொண்டாட்டம்

திருச்சியில் பக்ரீத் ஈகைத் திருநாள் தொழுகை - கொண்டாட்டம்

தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் கொண்டாட்டம், இறைதூதரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கூறப்படும் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஹஜ் மாதம் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமியர்கள், ஆண்டில் இரண்டு பெருநாள்கள், அதாவது இரண்டு முக்கியமான பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். முதலாவது ரம்ஜான் திருநாள், இரண்டாவது பக்ரீத் என்று கூறப்படும் ஈகைத் திருநாள் ஆகும். ஈகைத் திருநாள் அன்று அனைவரையும் நேசிக்க வேண்டும், இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும், தியாகம் செய்ய வேண்டும் என்பதை முன்னிறுத்தபடுகிறது. 

இப்ராஹிமின் தியாகத்தை கொண்டாடும் விதமாக, அந்த நாள் ஈகைத் திருநாள் அன்று கால்நடைகளை பலியிட்டு ஏழை எளியவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற இறைவன் கட்டளையை ஏற்று, அன்று முதல் இஸ்லாமியர்களால் பக்ரீத் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று திருச்சி சையது மதர்ஸா பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்ற தொழுகையில் நாட்டில் அமைதி ஏற்பட வேண்டும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மக்களிடையே எந்த பாகுபாடும் இன்றி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision