திருச்சியில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கான இடத்தை அமைச்சர்கள் ஆய்வு

திருச்சியில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கான இடத்தை அமைச்சர்கள் ஆய்வு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே ஹெச் ஏ பி பி தொழிற்சாலைக்கு சொந்தமான 150 ஏக்கர் இடத்தை தமிழ்நாடு அரசு பெற்று அதனை சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அந்த இடத்தை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ், தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் டி ஆர் பி ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்..... தமிழ்நாடு முதல்வர் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். டெல்டா பகுதியில் தொழில் வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாக தற்பொழுது திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூரியூர் பகுதியில் சிப்காட் தொழில்பேட்டை அமைப்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த சுற்றுபட்ட பகுதியை சேர்ந்த படித்த இளைஞர்கள் அதிக அளவில் வேலை வாய்ப்பு பெருவார்கள்.

இதை அமைத்து தர வேண்டுமென தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பலமுறை வலியுறுத்தியதாகவும், மேலும் இந்த இடத்தில் ஹெச் ஏ பி பி தொழிற்சாலைக்கு சொந்தமான இடமாக உள்ளது என்று அந்த இடத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் சுற்றுவட்ட பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அதிரடியாக அதற்குரிய பணியை தொடங்க சொன்னதாகவும், இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் வரலாறு காணாத வேகத்தில் விரைவாக 150 ஏக்கர் பரப்பளவு ஆரம்பிப்பதற்கு தமிழக முதல்வர் அறிவிப்பதோடு இல்லாமல் பணியை விரைந்து தொடங்க வேண்டும் இந்த பணி இன்றே தொடங்கிவிட்டது.

மேலும் இந்த பகுதியில் உள்ள பெல் நிறுவனத்தைச் சுற்றி பெரிய தொழிற்சாலைகள் உள்ளது. ஆனால் உற்பத்தி குறைவாக உள்ளது. இதனால் இந்த பிரச்சனை கடந்த ஆட்சி காலத்தில் இருந்தே உள்ளது. ஆனால் மாற்றான் தாய் மனப்போக்குடன் மத்திய அரசு செயல்படுவதாகவும், பெல்லுக்கு அதனால் தான் பெரிய ஆர்டரை பெற்று தரவில்லை. தமிழ்நாடு முதல்வர் டெல்டாக்காரன் ஆவார். மேலும் இதற்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

 இந்த இடத்தில் புதிய செக்டார் நிறுவனம் கொண்டு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பது அது தற்பொழுது சொல்ல முடியாது. இதன் மூலம் திருச்சியில் பெரிய அளவில் தொழில் வளர்ச்சி அடையும் போட்டிகள் பெரிய அளவில் உள்ளதால் அதை வெளியில் என்னால் கூற முடியாது. இங்கு இருப்பவர்களுக்கு தான் அதிகமான திறமைகள் உள்ளது. 

அதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சியில் படியுங்கள் அதிகம் எனக் கூறி வருகிறோம். இங்கு தொழில் நிறுவனம் தொடங்க வருபவர்கள் வளர்ச்சி போட்டி போட்டு வளர்கிறார்கள். கப்பல் துறைமுகம் இல்லாத இடத்தில் தொழிற்சாலை கொண்டு வருவது எவ்வளவு கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும் இங்கு தொழிற்சாலை கொண்டு வருவது சாதாரண விஷயம் இல்லை. எனவே இந்த பகுதியில் அமையும் தொழிற்சாலை இந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision