தரமற்ற முறையில் கட்டப்பட்ட கட்டிடம் - ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க உறுதிமொழி குழு தலைவர் அரசுக்கு பரிந்துரை.
தமிழ்நாடு அரசு உறுதிமொழி குழுத்தலைவர் / சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் சட்டப்பேரவை செயலர் முனைவர் சீனிவாசன் உறுதிமொழிக்குழு உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், அருள், சக்ரபாணி, நல்லதம்பி, மாங்குடி, மோகன் ஆகியோர் இன்று திருச்சி மாநகராட்சி, பெரியமிளகுபாறை பகுதியில் அமைந்துள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
கி .ஆ. பெ.மருத்துவ கல்லூரியில் 2 கோடியே 19 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய 150 இருக்கைகள் கூடிய தேர்வு கூடத்தினை ஆய்வு செய்தனர் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் அனைத்து இடங்களிலும் விரிசல் மற்றும் டைல்ஸ் சேதமடைந்தும் இருந்ததால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கட்டிடத்தை மீண்டும் ஒழுங்குபடுத்த வேண்டும் என இக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது .
இவ்வாய்வின்போது மாநகராட்சி ஆணையர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision