இயற்கை இடுபொருள் தயாரிப்பு மற்றும் இயற்கை விவசாய கண்காட்சி - மாதந்தோறும் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சி!!
திருச்சியில் இருந்து குளித்தலை செல்லும் வழியில் உள்ள சிறுகமணியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த வேளாண் ஆராய்ச்சி மையத்தில் அக்டோபர் 1-ம் தேதி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘இயற்கை இடுபொருள் தயாரிப்பு மற்றும் இயற்கை விவசாயம்’ குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு, இயற்கை உரங்கள் தயாரிப்பது, சாகுபடி செய்வது, அவற்றை சந்தை படுத்துவது, போன்ற பல்வேறு விஷயங்களை பற்றி நிபுணர்கள் விவசாயிகளுக்கு வழிகாட்ட உள்ளனர். மேலும் உரங்களை உற்பத்தி செய்வது, அதற்க்கான செலவுகளை குறைப்பதற்கான தொழில்நுட்பம் குறித்தான கண்காட்சி போன்றவையும் நடத்தப்படுகிறது.
தொடர்ந்து இந்த மாதிரியான நிகழ்ச்சியை அடுத்தடுத்த மாதங்களில் வரும் முதல் செவ்வாய்க்கிழமை நடத்தத் திட்டமிட்டுள்ளனர், பல்வேறு தகவல்களை நிபுணர்களும் மற்றும் விவசாயிகள் தங்கள் அனுபவங்களையும் பகிர உள்ள இந்த நிகழ்ச்சிக்கு முன்பதிவு முக்கியம் என்பதால் கீழே கொடுக்கப்பட்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு - செல்போன் : 91717 17832, தொலைபேசி : 0431- 2962854
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision