உதாசீனப்படுத்த வேண்டாம்.. மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் எச்சரிக்கை

உதாசீனப்படுத்த வேண்டாம்.. மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் எச்சரிக்கை

எத்தனை நவீன வசதிகள் வந்தாலும், அனைத்தும் நவீனமயம் ஆனாலும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் என்றும், நமக்கு நன்மை செய்யும் என்பதை நினைவில் கொள்வோம். ஏழை, பணக்காரர் வித்தியாசம் பாராமல் நோய்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. சுனாமி தொடங்கி கஜா புயல், வரதா புயல் நோய்த்தொற்று வரை மனித சமூகத்தை நிலைகுலையச் செய்து வருகிறது. உயிரோடு இருந்தால் போதும் என்று என்னும் மன நிலையைத் தொட்டவர்கள் பல லட்சம் பேர்.

எந்த நிலையிலும், எதையும் யாரையும், எப்போதும் உதாசீனப்படுத்த கூடாது. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை அனைவரும் புரிந்து கொண்டு வாழவேண்டும். ஒவ்வொன்றுக்கும் தனி சிறப்பு இருக்கிறது. ஒவ்வொரு மனிதருக்கும் அப்படித்தான். ஒவ்வொரு மருத்துவத்திற்கும் அப்படித்தான். இரண்டாம் கட்டமாக கொரோனா மிக வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதை யாரும் பொருட்படுத்துவது தெரியவில்லை. யாருக்கு தொற்று ஏற்பட்டால் என்ன என்ற மனநிலையில் அனைவரும் இருந்து வருகின்றனர். எனக்கு பாதிப்பு இல்லை வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியம் என்பதை அனைவரும் உணரவேண்டும். இனிமேல் இறப்பு விகிதம் நோய்த்தொற்று விகிதம் அதிகரிக்க கூடாது.

இதற்காக நீங்கள் செய்ய வேண்டிய ஒரு சிலவே சித்த மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நுரையீரல் பாதிக்கப்படாமல் இருக்க பல மருந்துகள் கூறப்பட்டுள்ளன. அவைகளை மருத்துவ ஆலோசனையோடு உங்கள் வீட்டில் வாங்கி வைத்துக்கொண்டு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதாசீனப் மருந்துகளை குறை கூறாமல் உடலைக் காக்க உயிரை காக்க நவீன மருந்துகளுடன் கீழ்வரும் சித்த மருந்துகளை வாங்கி வைத்துக்கொண்டு பயன்படுத்தி பயன்பெறுங்கள். 

மேற்கண்ட மருந்துகளை காலத்தில் பொதுமக்கள் வீட்டில் வாங்கி வைத்துக்கொண்டு சித்த மருத்துவ ஆலோசனை பெற்று தினசரி எடுத்துக் கொண்டு சத்தான உணவை சரியான நேரத்தில் உட்கொண்டு ஆறிலிருந்து எட்டு மணி நேர உறக்கம் தன்சுத்தம் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றினால் இத்தொடரில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கிறார் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மற்றும் மாவட்ட மருந்து ஆய்வாளர் மருத்துவர் காமராஜ்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu