நல்லவர்களை தேர்ந்தெடுத்து வாக்களியுங்கள்- பாரிவேந்தர் பேச்சு
இந்திய ஜனநாயகக் கூட்டணியில், IJK சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி பரப்புரை மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, வண்ண பேப்பர்கள் மற்றும் பூக்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே உரையாற்றிய அவர், 2019 தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின்படி, ரெங்கநாதபுரத்தில் இருந்து 2 மாணவர்கள் இலவச உயர் கல்வி திட்டத்தில் பட்டதாரிகளாகினர் என தெரிவித்தார். தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற உடன், இப்பகுதிக்கு ரேசன் கடை கட்டித் தரப்படும் என்றும், நீர்த்தேக்க தொட்டி, அமைக்கப்படும் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார். விவசாய களம் மற்றும் மயானபாதை சீர்படுத்தி தரப்படும் என்றும், கால்நடை மருந்தகம், விளையாட்டு மைதானம் ஆகியவை அமைத்து தரப்படும் என்றும் பாரிவேந்தர் உறுதி அளித்தார். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து, இளைஞர்களை சீரழிப்பதாகவும் குற்றஞ்சாட்டிய பாரிவேந்தர்,
தமிழகத்தில் ஊழல், லஞ்சம் பெருகி விட்டதாக விமர்சித்தார். ஊழல் கட்சிகளிலிருந்து வருபவர்களுக்கு ஊழல் மட்டும் தெரியும், அது அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது எனச் சாடிய டாக்டர் பாரிவேந்தர், நல்லவர்களை சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து, வேங்கடத்தானூர் கிராமத்திற்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, வன்ண பேப்பர்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு குழுமியிருந்த பொதுமக்களிடையே பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதி மக்களுக்கு செய்த நற்பணிகள் குறித்து புத்தகமாக வழங்கியிருப்பதாக தெரிவித்தார். வேங்கடத்தானூருக்கு MP நிதியிலிருந்து 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டி கொடுத்திருப்பதாக தெரிவித்த டாக்டர் பாரிவேந்தர், மக்கள் தேவைகளை நிறைவேற்றியதில் மன நிறைவாக இருப்பதாக கூறினார். பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளாக ஊழல், லஞ்சம் இல்லாத சிறப்பான ஆட்சியை நடத்தினார் என்றும், தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் ஊழலில் பழக்கப்பட்டவர்கள் என்றும் கூறினார். ஒட்டுக்கு பணம் கொடுப்பதற்காக ஊழல் செய்யும் திராவிட திருவாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். சுட்டெரிக்கும் சூரியனைப்போல், சூரியக் கட்சியும் அதிக அளவில் ஊழல் செய்கிறது என டாக்டர் பாரிவேந்தர் விமர்சித்தார்.
துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செங்காட்டுப் பட்டி கிராமத்தில் வாக்கு சேகரித்த டாக்டர் பாரிவேந்தர், தனது சொந்த நிறுவனங்கள் மூலம் கிடைத்த வருவாயிலிருந்து 118 கோடி ரூபாய் செலவு செய்து, ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரிகளாக ஆக்கியதாகவும், இந்தியாவில் எந்த MP-யம் இதுபோல் செய்ததில்லை எனவும் குறிப்பிட்டார். மோடியின் சிறப்பான ஆட்சியால் இந்தியா பெருமையடைவதாகப் பேசிய டாக்டர் பாரிவேந்தர், திமுக என்றாலே லஞ்சம், ஊழல்தான் என சாடினார். நல்லவர்களை தேர்ந்தெடுக்க தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என பாரிவேந்தர் கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, கீரம்பூர் பகுதிக்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், பெரம்பலூர் தொகுதியில் ரயில்வே திட்டம் நிச்சயமாக கொண்டு வரப்படும் என்றும், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் தெரவித்தார். பிரதமர் மோடியை உலக நாடுகள் Boss என அழைப்பதாக பாரிவேந்தர் புகழாரம் சூட்டினார். கடந்த முறை அளித்த வாக்குறுதிகளை முழுவதுமாக நிறைவேற்றிவிட்டு, தற்போது மீண்டும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வந்திருப்பதாக டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புத்தனாம்பட்டி கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, மாலை அணிவித்து. வாணவேடிக்கை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த மக்களிடையே உரையாற்றிய அவர், கடந்த முறை போன்று, இந்தத் தேர்தலிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஊழல் கட்சியிலிருந்து வரும் நபரை புறக்கணித்துவிட்டு, மக்கள் சேவையாற்றும் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். தொகுதி மக்கள் எதிர்பார்க்கிற அத்தனை தேவைகளும் உறுதியாக நிறைவேற்றித் தரப்படும் என டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தரை, தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில், தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தருக்கு, பொதுமக்களிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது. மேலும், டாக்டர் பாரிவேந்தருக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுவில், நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, திருச்சி SRM ஹோட்டல் வளாகத்தில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தரை, தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் மத்திய மண்டல தலைவர் ராஜேந்திரன், திருச்சி மாவட்ட தலைவர் நித்யா நடராஜன், செயலாளர் உமாபதி மற்றும் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தங்களது முழு ஆதரவை தெரிவித்தனர். அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் பெரம்பலூர் தொகுதியில் செய்த நற்பணிகள் அடங்கிய புத்தகத்தை, டாக்டர் பாரிவேந்தர், விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க நிர்வாகிகளுக்கு வழங்கினார். குறும்பர் சமூகத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து S.T. பிரிவுக்கு மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று, பெரம்பலூர் மக்களவைத் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் உறுதி அளித்துள்ளார்.
இந்திய ஜனநாயகக் கூட்டணியில், பெரம்பலூர் தொகுதியில் IJK சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு திரட்டி வருகிறார். இந்த நிலையில், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் பாரிவேந்தர், குறும்பர் சமுதாய மக்களின் குல தெய்வமாக விளங்கும் அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயிலுக்கு வருகை தந்தபோது, அவருக்கு, தமிழ்நாடு குறும்பர் முன்னேற்ற சங்கத்தின் செயல் தலைவர் உதகை செங்குட்டுவன் மற்றும் கோயில் நிர்வாக தலைவர் தர்மராஜ் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து, கோயிலில் மகாலெட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மகாலெட்சுமி அம்மனை டாக்டர் பாரிவேந்தர் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தார். டாக்டர் பாரிவேந்தருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், குறும்பர் சமுதாய மக்களின் விருப்பத்தின் பேரில் அம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார். மிகவும் தொன்மையான இக்கோயிலில், பல பேருக்கு இலவசமாக திருமணம், அன்னதானம் வழங்கப்பட்டு வருவதற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். குறும்பர் சமுதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான MBC யிலிருந்து ST பழங்குடியினர் வகுப்புக்கு மாற்றுவதற்கான கோப்புகள், மத்திய அரசிடம் உள்ளதாக தெரிவித்த அவர், தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு செல்லும்போது, குறும்பர் சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றப் பாடுபடுவேன் என்று பாரிவேந்தர் உறுதியளித்தார்.
டாக்டர் பாரிவேந்தரின் இலவச உயர் கல்வி திட்டத்தால் தன்னை போன்ற ஏழை எளிய மக்களின் கனவு நனவாகியதாக தெரிவித்துள்ள SRM பல்கலைக்கழகத்தில் பயிலும் துறையூரை சேர்ந்த மாணவி அகல்யா, தங்கள் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் எம்.பியாக வெற்றிபெறச் செய்வோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
2019 தேர்தலில் வெற்றி பெற்ற டாக்டர் பாரிவேந்தர், மகாலெட்சுமி திருக்கோயிலில் அஷ்டலட்சுமி பிரதிஷ்டை செய்தபோது நன்கொடை வழங்கியதாகவும், தங்கள் வாக்குகள் அனைத்தும் டாக்டர் பாரிவேந்தருக்குதான் என்றும் கலைச்செல்வி என்பவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய ராகவி என்பவர், நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் சமுதாய மக்கள் டாக்டர் பாரிவேந்தரின் வெற்றிக்கு பாடுபடுவதாகவும், தங்களுடைய ஆதரவு அவருக்குதான் எனவும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், I J K முதன்மை அமைப்புச் செயலாளர் S.S.வெங்கடேசன், முதன்மைச் செயலாளர் சத்தியநாதன் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் அருகே பாஜகவை ஆதரித்து பேசிய 2 சகோதரர்களை, திமுக நிர்வாகி கத்தியால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
லாடபுரம் கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் கந்தசாமி பாஜகவில் பெரம்பலூர் தெற்கு ஒன்றிய தலைவராக பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் அவரது தம்பி லட்சுமணன் கூட்டணி கட்சியை சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த திமுக நிர்வாகி ராஜா என்பவர் கந்தசாமியிடம் பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக மக்களுக்கு என்ன செய்தது என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கந்தசாமிக்கும், ராஜாவுக்கும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில், ராஜா மற்றும் அவரது நண்பர்கள் 10 பேர் கந்தசாமி மற்றும் லட்சுமணனை தாக்கியுள்ளனர். இந்நிலையில் ராஜா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கந்தசாமி மற்றும் லட்சுமணனை சரமாரியாக தலை மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் தாக்கியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த சகோதரர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டாம் என போலீசார் மிரட்டி வருவதாக பாஜக நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் ஊழல் கட்சிகளுக்கு இடமளிக்கக்கூடாது என்று, பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் கேட்டுக்கொண்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது அய்யர்மலை என்ற இடத்தில், டாக்டர் பாரிவேந்தருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க, அ.ம.மு.க, பா.ம.க, த.மா.கா, ஓ.பி.எஸ் அணி, தமிழர் தேசம் கட்சி, மக்கள் ராஜ்ஜியம் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் பேசிய டாக்டர் பாரிவேந்தர், உங்களை தேடி வாக்குகளை கோரி வந்துள்ளேன் - தவறாமல் தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டார். முந்தைய தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி ஆயிரத்து 200 மாணவர்களை இலவச உயர்கல்வித் திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆக்கியுள்ளதாக தெரிவித்தார். வரும் தேர்தலில் எம்பியாக தேர்வான பின்னர் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படும் என்று டாக்டர் பாரிவேந்தர் பேசினார். வரும் தேர்தலில் ஊழல் கட்சிகளுக்கு இடமளிக்காமல், நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று டாக்டர் பாரிவேந்தர் கேட்டுக் கொண்டார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision