திருச்சி கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரியின் மூன்று நாள் அரங்கேற்ற விழா

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரியின் மூன்று நாள் அரங்கேற்ற விழா

திருச்சி கலைக்காவிரி கல்லூரியில் பரதநாட்டிய சான்றிதழ் படிப்பின் முப்பத்தி நான்காவது மற்றும் இசை சான்றிதழ் படிப்பின் 30வது சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

 சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது இவ்விழாவில் விழாவின் சிறப்பம்சமாக அக்டோபர் 21 22 23 ஆகிய மூன்று நாட்கள் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில்முனைவோர் சுயவேலைவாய்ப்பு மையத்தின் இயக்குநர் மேனாள் பதிவாளர் முனைவர் பேரா. A. ராம்கணேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கல்லூரியின் செயலர் அருள்பணி S.G சாமிநாதன் அடிகள் தலைமையில் முதல்வர் முனைவர் ப.நடராஜன் முன்னிலையில் பட்டயச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

 சான்றிதழ்களை பேரா. A. ராம்கணேஷ் வழங்கி சிறப்புரையாற்றினார். 

 சிறப்புரையில் ஒரு கல்வி நிறுவனத்திற்கு மூன்று தேவைகள் அடிப்படையானது. நல்ல நிர்வாகம் , நல்ல ஆசிரியர்கள், நல்ல மாணவர்கள் இவை மூன்றும் சிறப்பாக அமைந்த நிறுவனம் கலைக் காவிரியாகும். 

திருச்சியின் அடையாளமாக மலைக்கோட்டைக்குப் பிறகு சாதி, இன பாகுபாடுகள் கடந்த அடையாளமாய் கலைக் காவிரி திகழ்கிறது. 

பிள்ளைகள் விரும்பும் கல்வியை வழங்குவதே பெற்றோரின் கடமையாகும். மாறாக திணித்தல் கூடாது. அவ்வகையில் பிள்ளைகள் விரும்பி கற்கிற துறையை தேர்ந்தெடுக்கவும் அத்துறையில் வெற்றிபெற துணை நிற்கும் பெற்றோர்களை வாழ்த்துகிறேன் என்றார்.

 கலையும் பண்பாடுமே ஒரு நாட்டின் இதயமாகும். அத்தகைய கலையைக் கற்று அரங்கேற்றம் செய்யும் மாணவர்களை மனதார வாழ்த்துகிறேன். ஐஐடியில் படித்தாலும் கற்றக் கலையை விட்டுவிடாமல் தொடர வேண்டும் என்றார்

உடன் பகுதிநேர நடனப்பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் பெனிட்டா, இசைப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் .T. பரலோகராஜ் , அருள்தந்தை ஜோசப் ஜெயசீலன் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

 முதல் நாள் 68 பேர், IECD சான்றிதழ் 25 பேர் பங்கேற்று சான்றிதழ் பெற்றனர். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் கி.சதீஷ் குமார் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.