இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் தயாளனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருச்சி - சென்னை பைபாஸ் ரோடு சஞ்சீவி நகர் ஜங்ஷன் நாகநாதர் டீக்கடையில் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது மைசூர், நியூ பம்ப் பஜாரைச் சேர்ந்த சோமசேகர் மற்றும் மனோஜ் ஆகிய இரண்டு பேரும் முட்டைக்கோஸ் மற்றும் சில காய்கறி மூட்டைகோஸ்களுக்கு இடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் சுமார் ஒரு டன் எடை கொண்டது அதன் மதிப்பு 30 லட்சத்து 50 ஆயிரம் என தெரியவந்தது.

மேற்படி இருவரையும் விசாரணை செய்ததில் திருச்சி காந்தி மார்க்கெட்டைச் சேர்ந்த விஜயபாஸ்கர் மற்றும் முத்து ஆகியோர் கேட்டுக்கொண்டதன் பேரில் மைசூரை சேர்ந்த பவர்லால் என்பவர் அனுப்பியதன் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை காய்கறி மூட்டைகளை கடையில் மறைத்து எடுத்து வந்ததாகவும், மேற்படி பாஸ்கர் மற்றும் முத்து என்பவரை கைது செய்து அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கைப்பற்றியும், குட்கா விற்பனை செய்த 3 லட்சம் பணத்தையும் கைப்பற்றி கோட்டை காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவர்கள் மீதான விசாரணையில் கம்பரசம்பேட்டை கணபதி நகரைச்சேர்ந்த விஜயபாஸ்கர் என்பவர் தொடர்ந்து இதுபோன்ற அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு பல இளைஞர்களை போதைக்கு அடிமையாகி அவரது வாழ்க்கையை சீரழித்தது தெரியவரவே கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பரிந்துரையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் விஜயபாஸ்கர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆணையிட்டார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஜயபாஸ்கருக்கு குண்டர் தடுப்பு சட்ட ஆணையம் செய்யப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn